பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




---

12 -

அப்பாத்துரையம் - 46

சரக்கு அல்லது மிகுதி மதிப்புப் பொருள் முழுவதும் முதலாளியே பெற்றுக் கொள்கிறான். முதலாளித்துவ முறையின் கீழ் செல்வம் ஒரு சில கைகளில் குவியும் முறை இதுவே.

இக்காலத்தில் விஞ்ஞானத்தினால் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள பேருதவியின் காரணமாக, முன்பு என்றுமிருந்ததை விட மிகுதியான உற்பத்தி பெருகியுள்ளது. இம்மிகுதியினால் பயனடைபவர் முதலாளி மட்டுமே. இங்ஙனம் கூறுவதனால் எல்லாத் தனிப்பட்ட முதலாளிகளும் தனித்தனியாகச் செல்வப் பெருக்குடையவராகிறார்கள் என்று கொள்ளக் கூடாது. ஏனெனில் முதலாளிகளிடையேயும் போட்டி இருந்தே வருகிறது. இதில் செல்வமிகுதியுடைய முதலாளிகளும் வலிமை மிகுதி யுடைய முதலாளிகளும் பின்னும் செல்வமுடையவர் களாகிறார்கள். வலுக்குறைந்த முதலாளிகளோ படிப்படியாக வறுமையுற்று முதலாளி வகுப்பிலிருந்தே தள்ளப்பட்டு விடுகிறார்கள். இவ்வகையாக உலகின் செல்வநிலை ஒருபுறம் உயர்ந்து கொண்டே போகிறது. ஆனால் அதே சமயம் முதலாளி வகுப்பிலுள்ள முதலாளிகள் தொகை குறுகிக்கொண்டும் அக்குறுகிய தொகையினர் செல்வமும் ஆற்றலும் பன்மடங்கு பெருகிக்கொண்டும் வருகிறது.

வினா (9)

இதனால் மக்களிடையே பசியும் வறுமையும் பெருகுகிறது என்பது எங்ஙனம் பொருந்தும்?

ம்

விடை : பெருவாரியான உற்பத்தியின் மூலமே இயந்திர சக்தி சிக்கன மிக்கதாக இருக்கக்கூடும். ஒரு முதலாளி விளக்கு ஒன்று நான்கணா வீதம் மாதம் 50,000 விளக்குகள் உற்பத்தி செய்து அவற்றை ஒன்று எட்டணா வீதம் விற்கிறான் என்று வைத்துக்கொள்வோம். விளக்கு ஒன்றுக்கு அவனுக்கு அணா நான்கு ஆதாயம் கிடைக்கும். இம் முதலாளியைவிட மேம்பட்ட உற்பத்திச் சாதனங்களை உடைய அதாவது, அவனுடைய இயந்திரத்தைவிடச் சிறந்த இயந்திரத்தையோ மிகுதி இயந்திரங் களையோ உடைய இன்னொரு முதலாளி இருக்கலாம். இவ்விரண்டாவது முதலாளி உருப்படி ஒன்று இரண்டணா வீதம் நூறாயிரம் விளக்குகள் உற்பத்தி செய்து ஒன்று ஆறணா வீதம் விற்கலாம். அப்போது அவனுக்குக் கிடைக்கும் ஆதாயம் முதல் முதலாளியின் ஆதாயத்தில் இரட்டிப்பு ஆகும். முதல்