பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

13

முதலாளியின் சரக்குகள் உயர் விலையில் விற்பதால் நிலைமை அவனுக்குப் பாதகமாகிறது. செல்வத்தில் அவனை மிஞ்சிய மற்ற முதலாளியுடன் சரிசமமாகப் போட்டிபோட வேண்டுமானால், அவன் தன் உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டும். இதற்கு அவன் ஒன்று மூலப் பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்க வேண்டும். (இது செய்வதானால் சுரங்கத் தொழிலாளி அல்லது மற்ற மூலப்பொருள்கள் உற்பத்தியாளர் குறைந்த பணமே கூலியாகப் பெற வேண்டி வரும்.) அல்லது தன் தொழிலாளரின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும். அல்லது இவ்விரண்டும் செய்ய வேண்டும். இவ்விரண்டும் செய்யமுடியவில்லையானால் அவன் தன் தொழில் துறையிலிருந்து ஒழிக்கப்படுவான். அவன் தொழிற்சாலை மூடப்பட்டோ அவனுடன் போட்டியிடுபவனால் வாங்கப்பட்டோ போகும். மேற்குறிப்பிட்ட வழிகள் எதனாலாவது அவன் வெற்றியடைந்தால், அதே உற்பத்திச் செலவுக் குறைவால் அவன் எதிரியும் நலம் பெறுவான். எதிரியின் சாதகநிலை முடிவடையாது; பின்னும் தொடர்ந்து நிற்கும். ஆயினும் இப்போட்டிக் கிடையில் யார் வென்றாலும் தோற்றாலும் கட்டாயம் நட்டப்பட்டாக வேண்டியவன் தொழிலாளி; சுரங்கத் தொழிலாளியானாலும் சரி, தொழிற்சாலை உழைப்பாளி யானாலும் சரி,அவன் கட்டப்பட்டுத் தீரவேண்டியவனே ஆவான். அவன் பெறுவது வரவரக் குறைந்து கொண்டுதான் செல்லும். முதலாளித்துவ முறை நடப்புக்கு வந்தது முதல் இப்போக்கு தொடர்ந்து கொண்டே யிருக்கிறது. இதன் பலனாக வரலாற் றில் இதற்குமுன் என்றுமிருந்ததைவிட இன்று உலகில் வறுமை மிகுதி. ஆனால் இதே சமயம் உலகத்தின் மொத்தச் செல்வம் தொழிற் புரட்சிக் காலமுதல் எவ்வளவோ மாபேரளவில் பெருக்க மடைந்துள்ளது.

வினா (10): முதலாளித்துவ முறை எப்படி போருக்குக் காரணமாகிறது?

விடை : நாம் மேலே இரண்டு முதலாளிகளுக்கிடையே ஏற்படுவ தாகக் காட்டிய அதே போட்டி இருவேறு நாடுகளில் உள்ள முதலாளித்துவ வகுப்பு களுக்கிடையே நடைபெறுவ துண்டு. இது இறுதியில் போரி னாலேயே அதாவது படைவலிமையினாலேயே தீர்க்கப்படக் கூடியதா யிருக்கிறது.