பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

||---

அப்பாத்துரையம் - 46

சமதர்மம் ஒரு தனித் தேசவாழ்வாகத் திட்டமிடப்படுவ தில்லை. உலக முழுவதற்குமாகவே திட்டமிப்படுகிறது. சமதர்ம சமூகம் ஒரு நாடு மட்டிலுமின்றி உலக நாடுகள் எல்லாவற்றிலுமே வகுப்பு வேறுபாடு களை ஒழிக்கும். இது முதலாளித்துவப் போட்டியை அகற்றிவிடும். போருக்குக் காரணமான முதலாளித்துவப் போட்டியும் அதன் பயனான பொறாமை யும் பூசலும் இருக்கமாட்டா.

வினா (11) : சமதர்மம் மெய்யாகவே போரை ஒழித்து விடுமா? அல்லது அங்ஙனம் கூறுவது ஒரு பிரசாரக் கூச்சல் மட்டும் தானா?

விடை : (சமதர்ம முறையில்) மக்கள் அதாவது சமூகமே உற்பத்திச் சாதனங்களின் சொந்தக்காரராயிருப்பதால், எல்லார் தேவைக்கும் போதிய அளவில் அவர்கள் உற்பத்தி செய்து விடுவர். மேலும் எல்லா உற்பத்திப் பொருள்களும் சரி நேர்மையுடன் பரப்பி வழங்கப்படுமாதலால் எவருக்கும் குறைபாட்டினால் இன்னல் ஏற்படாது. உலக முழுவதும் சமதர்ம முறையை ஏற்கும் காலம் வந்ததும், தேவை அடிப்படையில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கிடையிலும் மூலச்சரக்குகளும் உற்பத்திச் சரக்குகளும் இலவசமாகவே பரிமாறிக் கொள்ளப் படும்.எடுத்துக்காட்டாக, ஐரோப்பாவில் குறைபாடும் ஆசியாவில் மிகைபாடும் இருக்குமானால், ஆசியா ஐரோப்பாவுக்கு அக்குறை பட்ட சரக்கைத் தருவித்துக் கொடுக்கும். அதன் குறைபாட்டை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாது.

தற்போது ஒரு நாடு குறைபாட்டால் நலிவுற்றால் வளப்பமிக்க மற்ற நாடு அதீத விலை வாங்கிக் கொண்டு அந்நாட்டுக்கு அப்பொருளை விற்க முயல்கிறது. இது மக்கள் குறைபாட்டை முதலாகக் கொண்டு ஆதாயம் பெறுவதாகும். அத்துடன் பொருள்கள் இலவசமாகப் பரிமாறிக் கொள்ளப் படுவதே யில்லை. ஜெர்மனி இரும்பும், இந்தியா பணிமரமும் உற்பத்தி செய்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு நாட்டை ஒரு நாடு சுரண்ட பார்க்காமலே இரு நாடுகளும் அவற்றைப் பரிமாறிக் கொள்ள முடியும். ஆனால் இது இன்று அரசியலார் கட்டுப்பாடு களினால், அதாவது சுங்கம், பாதுகாப்பு வரிகள் ஆகியவற்றால் தடைபடுகிறது. உலகநாடுகள் பரிமாற்றத்திலுள்ள இந்த வெளிப்படைச் சூறையாட்டு ஒழிக்கப்பட்டுவிட்டால்போருக்கான காரணமும் ஒழிந்துபோகும்.

ரு