பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

15

.

வினா : (12) ஆதாயம்' என்றும் 'செல்வம்' என்றும் நீங்களே கூறு கிறீர்கள். ஒரு தனி ஆளோ ஒரு வகுப்போ ஆதாயம் பெற்றுச் செல்வ மடைவதற்கு உரிமை கிடையாதா?

கு

விடை : மனிதன் தன் தேவைக்கு மேல் பெறப் படாதென்றில்லை. ஆனால் இது ஒரு அளவுவரை மட்டுமே. ஒருவனுக்கு மாதம் ரூ. 30 கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம் (பொதுவாகக் கல்கத்தாவிலும் பம்பாயிலும் சராசரித் தொழிலாளி பெறுவது இதுவே). இதனால் மாதம் ரூ. 300 அல்லது ரூ. 3000 கூடச் செலவு செய்ய அவனுக்கு வகை தெரியாது என்றில்லை. ஆனால் தொடர்ந்து மாதம் ரூ. 3,000 செலவு செய்வதானால் அது அவனுக்கு சிறு பிரச்சனையாகவே ஆகிவிடும். அப்போது அதன் ஒரு பெரும் பகுதி வீணாகவே செலவழிக்கப்படும். வீண் செலவு செய்யப்படா விட்டால் சொந்தச் செலவும் குடும்பச் செலவும் போக மிச்சத்தொகை ஏற்படும். ஒருவனுக்கு (முதலாளிகள் சிலருக்குக் கிடைப்பது போல்) மாதம் ரூ.30,000 வருவாய் கிடைத்தால், அதில் ஒரு பெரும் பகுதி இத்தகைய மிகைப்பட்ட மிச்சமாகும். இவ்வளவு பெரிய வருவாய் இரண்டு வகைகளில் நேர்மையற்ற தாகும். ஒன்று, இவ்வளவு பெரிய வருவாயை அவன் பெறுவதனால் அதில் தனக்குத் தேவையில்லாத பகுதியைப் பிறர் பெற்றுப் பயனடைய முடியாமல் அவன் தடுக்கிறான். அதே சமயம் அவனுக்கு அதைத் தனக்காகவும் செலவு செய்ய முடியாது. இரண்டாவது அவன் அதை வைத்துக் கூடுதல் இயந்திரமோ நிலமோ வாங்கி அதில் வேலை செய்ய இன்னும் பலரை அமர்த்துகிறான். இது இன்னும் மிகுதியான ஆதாயம் தருகிறது. இங்ஙனமாக, பெருத்த ஆதாயம் கிட்டத்தட்ட எப்போதுமே மேலும் மேலும் ஆதாயத்தை வலியுறுத்திப் பெருக்குகிறது. இதனால் சமூக நலனுக்கு ஒவ்வாத வகையில் செல்வம் ஓரிடத்தில் சென்று குவிகிறது. எனவே ஒருவன் ஆதாயம் பெற உரிமையுடைய வனேயாயினும் மட்டற்ற அளவு பெறக்கூடாது.பெற்றால் அது சுரண்டலுக்கு வழி செய்வதுடன் பிறருக்குத் தீங்கு விளைவித்தே ஆதாயமாகக் கூடும்.

வினா (13): ஆதாயம் என்றால் என்ன? செல்வம் என்றால் என்ன?

விடை : ஒரு முதலாளி ரூ. 5,000 பெறுமானமுள்ள மூலப் பொருள்கள் வாங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். அதை