பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

அப்பாத்துரையம் - 46

வைத்துத் தனக்குச் சரக்கு உண்டுபண்ணுவதற்காக ஒரு நூறு தொழிலாளிகளை அவன் அமர்த்திக்கொண்டு ஆளுக்கு மாதம் ரூ.20 ஊதியமாகக் கொடுக்கிறதாகவும் கொள்வோம். அவனது மாதச் சம்பளப்பட்டியல் ரூ. 2,000 ஆகிறது. இப்போது பொருள்கள் அவனுக்கு ரூ. 7,000 கொள் மதிப்புடையதாகிறது. இதனுடன் வாடகை, வரிகள், விளக்குச் செலவு, சுமை கூலி, வர்த்தகக் கழிவுகள், இயந்திரத்தின் நாட்கழிவுக் குறைபாடு (இவற்றின் மதிப்பு ரூ. 3,000 என்று மதிப்பிடலாம்) ஆகியவற்றைச் சேர்ப்போம். இப்போது மொத்தக் கொள்மதிப்பு ரூ. 10,000 ஆகிறது. சரக்குகளை அவன் ரூ. 15,000க்கு விற்கலாம். இதில் அவனுக்குக் கிடைக்கும் ஆதாயம், ரூ. 5,000. அவன் வேலை யாட்கள் ஒவ்வொருவருக்கும் கிட்டும் தொகையைப் போல் 250 மடங்கு மிகுதியான இப்பெரும் பொருளை அவன் பெறு வதற்கான ஒரே தகுதி அவன் இயந்திரங்களின் சொந்தக்காரன் என்பதும் அவனிடம் ரொக்கமாகப் பணம் இருப்பதனால் தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்க முடிகிறது என்பதுமே.

இத்தனைக்கிடையிலும் நேரடியாக அவன் தானாகவே எதுவும் உண்டுபண்ணவில்லை. இதனால் உற்பத்தி செய்வதற்கு அவன் செலவு செய்ததைவிட மிகுதியான பொருள் பெற்றிருக் கிறான் என்பதும்,அதுவும் தான் பெறும் உற்பத்திக்கு உழைக்காமல் பெற்றிருக்கிறான் என்பதும் தெளிவு. இத்தொகையை கார்ல் மார்க்ஸ் மிகுதி மதிப்பீடு அதாவது முதலிட்டதற்கு மேற்பட்டு அவனுக்குக் கிடைக்கும் விலைமதிப்பு என்று குறிப்பிட்டார்.

செல்வம் அல்லது சொத்து என்பதன் சொற்பொருள் இவ்வுலகில் கிடைக்கும் பொருள்களில் மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ளப் பயன்படுத்தக் கூடும் பொருள் என்பதே. அவை ஒரு வீடாகவோ, ஒரு மரமாகவோ, ஒரு இயந்திரமாகவோ, துணிக்கட்டுகளாகவோ இருக்கலாம். முடிவான ஆராய்ச்சியின்படி பார்த்தால் அது இன்றோ சென்ற காலத்தில் என்றைக்கோ மனிதனால் உற்பத்தி செய்யப் பட்டதாகவே இருக்கும். ஆகவே உலகத்தின் பொருள்கள் யாவுமே மனிதன் உற்பத்தி செய்ததும் சென்ற சில பல காலங்களில் செய்து சேர்த்ததுமே யாகும்.

பயன்படும் இப்பொருள்களை அடிக்கடி ஒன்றுக்கொன்று மாற்ற வேண்டியதாயிருக்கிறது; காரணம் மனிதத் தேவைகள்