பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

17

உணவு, பருகுநீர், உடை, உறைவிடம், பயணம், வாசிப்பு, இன்பப் பொழுதுபோக்கு எனப் பல வகைப்பட்டன. முற்காலங்களில் உணவு உற்பத்தி செய்பவன் தான் உற்பத்தி செய்த உணவுப் பொருளைத் துணிகளுடன் பரிமாறிக்கொண்டான். அத்துணியை ஆடையாகத் தைத்த தையல்காரனுக்கும் அதுபோலச் சிறிது உணவுப்பொருள் கொடுத்தான். ஆனால் தையல் காரனுக்குச் சில சமயம் உணவுப் பொருள் வேண்டியிராமல், வீடு வேண்டி யிருந்ததென்று வைத்துக் கொள்வோம். அப்போது பண்டமாற்று நடைபெறுவது எவ்வாறு?

ஆகவேதான்

பண்டமாற்றை

எளிதாக்கும்

ரு

பயனல்லாது, தனக்கென வேறு பயனற்ற ஒரு பொருளின் தேவை ஏற்பட்டது. அப்பொருளே பணம் ஆகும். இப்போது பணத்தின் பயன் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அதற்கு இப்பண்டமாற்று தவிர, வேறு பயன் உண்டா? மனிதர் தாமாகப் பார்த்து அதற்குக் கொடுத்துள்ள மதிப்பினாலே அது பண்டமாற்றுக்கு மட்டும் பயன்படுகிறது.

நாணயம் எனப்படும் உலோகத்தாலான துட்டு வடிவிலா யினும் சரி, செலாவணிச் சீட்டு (கரன்ஸி நோட்) எனப்படும் தாள் வடிவிலாயினும் சரி, பணம் எவருக்குமே பண்டமாற்றுக்குரிய குறியீடாய் விட்டது. ஒரு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாணயங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் உற்பத்தி பெருகி, ஏராளமான சரக்குகள் பண்டமாற்றப்பட வேண்டி வந்தபோது, நாணயங்களை வழங்குவது கூடப் பெருந்தொல்லையாகத் தோன்றிற்று. ஆகவே அரசியலார் தலையிட்டு உறுதிச்சீட்டுக்கள் (பிராமிசரி நோட்டுக்கள்) வழங்கினர். வை பெருந்தொகை நாணயங் களில் அடையாளக் குறியீடுகள் ஆயின. இவையே செலாவணிச் சீட்டுக்கள் (கரன்சி நோட்டுக்கள்) ஆகும்.

ஆகவே செல்வமுள்ள மனிதன் என்று சொல்லும்போது நாம் என்ன பொருள் கொள்கிறோமென்றால், அவன் ஒரு பொருளையோ, அல்லது அதன் பண்டமாற்று மதிப்பு அதாவது பணத்தையோ, தன் தேவைக்கு மேற்பட மிகுதி உடையவன் என்பதே. ஆனால் இன்று செல்வமுள்ளவன் என்பதற்கு இன்னொரு பொருள், இதனிலும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்க பொருள் உண்டு. அதாவது அவன் பேரளவான செல்வத்தை