பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

|___

அப்பாத்துரையம் - 46

உடையவனாயிருப்பதுடன் மட்டுமல்லாது, உற்பத்திச் சாதனங் களையும் தனதாக உடையவன் என்பதும் அதன் மூலம் அவன் பிறரை உழைக்கச் செய்து அதனால் தானே ஊதியம் பெறுபவனும் ஆவான் என்பதுமே.

வினா (14) : தொழிலாளிகள் ஆதாயத்தைத் தமக்குள்ளேயே சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்ளும்படி தொழில் துறைகளை அவர்களே மேற்கொள்ள வேண்டும் என்று சமதர்மம் கோருகிறதா?

விடை : இல்லை. சமதர்மம் அங்ஙனம் கோரவில்லை. தொழிலாளிகளை முதலாளிகளாக்கவும் அது எண்ணவில்லை. ஒரு குறிப்பிட்ட தொழிற் சாலையில் தொழில் புரிபவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உடனடியாகச் சொந்தக்காரர்கள் அல்லர். அதன் உடைமையுரிமை சமூக முழுமைக்குமாகும்.

மேலும் பொருள்களை உற்பத்தி செய்தால் போதாது. அது பரக்க வழங்கப்பட வேண்டும். அத்துடன் உற்பத்தி மனம் போன அளவில் நடைபெற முடியாது. அது சமூகத்தின் தேவையை யொட்டியே திட்டப் படுத்தப்பட வேண்டும். உலக மக்களால் பத்து நூறாயிரம் பாரம் (டன்) காப்பிக் கொட்டையே செலவு செய்யப்பட முடியும்போது ஐம்பது நூறாயிரம் பாரம் உற்பத்தி செய்வதில் பொருள் இல்லை. சமதர்மம் செய்ய வேண்டிய தெல்லாம் பொருளழிவுக்குத் தக்கவகையில் உற்பத்தியை ஒழுங்கு படுத்துவது மட்டுமே. இதுவே திட்டப்பட்ட பொருளியல் முறை எனப்படுவது.

என்ன?

வினா (15) : திட்டப்பட்ட பொருளியல் முறையினால் நன்மைகள்

விடை: அதனால் நம் தேவைக்கு எவ்வளவு வேண்டப்படு கிறதோ அவ்வளவே உற்பத்தி செய்யப்படும். மேற்குறிப்பிட்ட மிகுதிப்படியான நாற்பது நூறாயிரம் பாரம் காப்பிக் கொட்டையையும் உற்பத்தி செய்வதில் ஈடுபட்டிருக்கக் கூடும் ஆள் திறத்தை வேறு வழியில் திருப்புவோம். அதாவது சவுக்காரம், வானொலிப் பொறிகள், உணவு, வீடுகள் முதலிய வற்றில் ஈடுபடுத்துவோம்.

உற்பத்தி வகையில் உயர்தரத் தொழில் நுட்பமுறைகளின் முன்னேற் றத்தின் பயனாக, உலகத்தின் ஓர் ஆண்டுத் தேவையை