பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

19

நாம் இப்போது ஆறு மாதத்தில் உண்டுபண்ண முடிதல் கூடும். அந்நிலையில் நாம் இங்ஙனம் மிச்சப்பட்ட ஆறு மாதத்தைத் தொழிலாளிகளுக்கு விடுமுறை நாட்களாக ஆண்டு முழுவதும் பரப்பி அளிக்கலாம். ஆதாயம் பொருள்கள் வடிவிலா யினும் சரி, ஓய்வு நேர வடிவிலாயினும் சரி, வசதிகள் வடிவிலாயினும் சரி, எல்லாருக்கும் அவற்றில் பங்கு கிடைக்கும்படி செய்யப்படும்.

வினா (16): முதலாளித்துவ உற்பத்திமுறை குழப்ப நிலைமைக் கும் பொதுவாக வறுமைக்கும் வழி வகுப்பது ஏன்?

விடை : மக்களின் தேவைக்கு ஏற்றபடி உற்பத்திக்குத் திட்டமிட வேண்டும்; சமதர்மம் அங்ஙனமே திட்டமிடும். ஆனால் ஆதாய நோக்கம் ஒன்றே கொண்டுள்ள முதலாளித்துவம் மனம் போனபடி உற்பத்தியைப் பெருக்குகிறது. உற்பத்தியின் போது முதலாளிகள் ஒருவரை ஒருவர் கலந்துகொள்வதில்லை. அவர்கள் உள்ளார்ந்த போட்டிப் பகைமை யிடையே அவர்கள் கலப்பதுதான் எங்ஙனம்? அவர்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் கூட மறைமூடாக்காகவே யிருக்க வேண்டியதாகிறது. ஏனெனில் அவர்கள் ஒரே பேரவா, தாம்தாம் எல்லாரையும்விடப் பேரளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே. அவ்வாறு செய்வதால்தான் உற்பத்தியில் மிகுந்த அளவு ஆதாயம் கிடைக்கும். இம்முறையில் சில சமயம் மக்கள் வாங்கும் அளவுக்கு அல்லது வாங்க முடியும் ஆற்றலுக்கு மேற்பட்டு அவர்கள் உற்பத்தி செய்து விடும்படி நேருகிறது.

பொருள்கள் முடக்கமும் அதன் பயனாக விலைத் தவக்கமும் இதனால் தொடர்கின்றன. இந்நிலையில் பொருள்கள் மட்டுமீறி மலிந்த விலைக்கு விற்கப்படுகின்றன. ஆனால் ஆக்கப்பொருள் மலிவானால் மூலப் பொருள்கள் விலை குறைய வேண்டும், அல்லது தொழிலாளர் கூலியைக் குறைக்க வேண்டும். அத்துடன் முன்னமே பெரும் பொருள் திரட்டி அதன் பயனாக இந்நட்டத்தைத் தாங்கும் சக்தியுள்ள முதலாளிகள் மட்டுமே இக்குழப்பத்தி லிருந்து தப்பி வெளிவருவர். மற்றவர்கள் உற்பத்தியையே அடியோடு நிறுத்தித் தொழிலாளரையும் விலக்கிடுவர். இதனால் பொது வாழ்வில் வறுமை பெருகுகிறது. இன்றைய சமூக நிலையில் சராசரி பொதுமனிதன் மிக நல்ல காலங்களில் கூடத் தன் இன்றியமையாத் தேவைகளை