பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(20) ||

அப்பாத்துரையம் - 46

நிறைவேற்றும் அளவுக்குப் போதுமான மட்டுமே பொருளீட்டு கிறான். இங்ஙனம் ஈட்டும் ஆற்றலில் ஏற்படும் எந்தக் குறைவும் வறுமையையே உண்டுபண்ணுகிறது.

ம்.

இம் முடிந்த முடிவுக்கு நிகழ்ச்சிகள் சென்று விடாமலிருக்க முதலாளித்துவமும் முயற்சிகள் எடுக்காமலில்லை. ஆனால் அம்முயற்சிகள் அறிவுக்கேற்ற முயற்சிகள் என்று கூற முடியாது. அது செய்வதெல்லாம் சிறு முதலாளிகளை ஒழித்து அவர்களினிடமாகச் செல்வ நிலையில் இன்னும் உயரிய ஒரு சிறு குறுகிய குழுவை உண்டுபண்ணுவதே. இக்குழுவினுக்குச் செல்வப் பொறுப்பாண்மைகள் (Trusts), தனியுரிமை ஏகபோகங்கள் (Monopolies), கூட்டுக்குழுக்கள் (Combines) என்ற பெயர்கள் வழங்குகின்றன. அதாவது ஒரு சில முதலாளிகள் சேர்ந்து தம் விடுமுதலை ஒருங்கு கூட்டிச் சேர்த்தும் (by pooling) பல சமயம் அரசியல் பாதுகாப்பைப் பெற்றும் மின்சாரக் குமிழிகள் போன்ற பொருள்களை ஒவ்வொரு நாட்டிலும் செய்ய முற்படுகின்றனர். போட்டியென்பதே யில்லாத காரணத்தால் இம்முயற்சியில் மட்டுமீறிய அளவு ஆதாயம் உறுதிப்படுகிறது. இரண்டாவதாக, சில சமயம் அது பொருள்களின் அருந்தல் விலை நிலையைத் திட்டமிட்டு உண்டுபண்ண முடிகிறது. அதன்படி மக்கள் தேவையின் அளவுக்குக் குறைவாக அது உற்பத்தி செய்து விலை ஏற்றுகிறது.போதுமான அளவு கிடையாத பொருளுக்கு மக்கள் மிகுதி விலை கொடுக்க முன்வருவது இயல்பே. பொறுப்புக் குழுவின் ஆதாயம் இதனாலும் பெருகிறது.

இச்சூழ்ச்சி முறைகள் எப்பொழுதும் வெற்றி பெறுவதில்லை. உண்மையில் முடிவில் அவை யாவுமேதான் தோல்வியடைகின்றன. மக்களின் ஈட்டும் ஆற்றல் மொத்த உற்பத்தியாலேயே நிர்ணயிக்கப் படுவது. பல முதலாளிகள் இருக்கும் வரை தொழிலாளர்களுக்குத் தொழில் கிடைக்கும் வாய்ப்புகள் மிகுதி.முதலாளிகள் போட்டியும் ஓரளவில் தொழிலாளர்களுக்கு உதவுகின்றது. அவர்கள் உச்ச அளவு சம்பளம் கொடுப்பவரிடம் செல்ல முடியும். தனி யுரிமைக்குழு (ஏகபோக) முறையில் இதற்கு நேர்மாறாக முதலாளிகளே மனம்போனபடிச் சம்பளம் வகுக்க முடியும். உயர்தர இயந்திரங்களைப் பயன்படுத்தி அவர்கள் 'தொழிலி லீடுபடும் தொழிலாளர் தொகையைக் குறைக்கவும் முடியும்.