பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

21

உற்பத்தியில் உயர்தரத் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வழங்குவதில் சமதர்மத்திற்கு எத்தகைய பகைமையும் கிடையாது. நேர்மாறாக அது அச்செயலில் முனைந்து நிற்பதேயாகும். இதிலுள்ள வேற்றுமையெல்லாம் சமதர்மம் அம்முன்னேற்றத் தால் சமூகத்திற்குக் கூடுதல் செல்வமும் தொழிலூழியருக்கு மிகுதி ஓய்வு நேரமும் கிடைக்கவேண்டுமென்று விரும்புவதும்; பொறுப்பு முதலாளிக் குழுவினர் அதனால் தங்கள் செல்வம் பெருக வேண்டும் என்று நினைப்பதுமேயாகும். பிந்திய முறையில் பயனும் பெருஞ்செல்வமும் ஒரு சிலருக்கும், பொதுவாகப் பெரும்பாலருக்கு வறுமையுமே ஏற்படும்.

சமதர்மத்தின் திட்ட அமைப்புக்கும் முதலாளித்துவப் பொறுப்புக் குழு முறைக்கும் இங்ஙனம் பெருத்த வேறுபாடு உண்டு. முதலது பொது நலத்தையும் பின்னர் ஒரு சிறு குழு நலத்தையும் நாடியது.

வினா (17) சமதர்மத்தின் கீழ் வேளாண்மையின் நிலை யாது?

விடை : வேளாண்மையே உலகின் மிகப் பழமையான தொழில் முறையாகும். மனிதனின் முதல் தேவை உணவூட்டமே. இது பெரும்பாலும் நிலத்திலிருந்துதான் கிடைக்கிறது. நிலத்தில் வளரும் பயிர்கள் ஒருபுறம், நிலத்தின் மீது வளரப் பெறுபவை யாகிய கால்நடைகள், கோழி, பிற பறவைகள், வேட்டை விலங்குகள்,காய்கறிகள் ஆகிய பண்ணை விளைவுகள் மற்றொரு புறம். இத்தேவையை நிறைவேற்றுகின்றன. வேளாண்மையில் உற்பத்தி பெருக்குவது இயற்கையே; மனிதன் செய்வது நிலத்தில் எது உற்பத்தியாவது என்பதை வரையறுப்பதும், திட்டமிடுவதும், இயக்குவதும் மட்டுமே. இயற்கையின் வளப்பத்துக்கு உண்மை யில் எல்லையே கிடையாது. ஏனெனில் உலகிலுள்ள நிலம் முழுவதும் உணவு உற்பத்தியிலீடுபடுத்தப்பட்டால், அவ்வளவை யும் உண்ணுவதற்கு இன்று உலகிலிருக்கும் மக்கள் போத மாட்டார்கள். ஆனால் பண்படுத்தப்படக் கூடிய உலக நிலப் பரப்பில் ஒரு பெரும் பகுதி என்றும் பண்படுத்தப் படாமலே இருந்து தீரும். ஆயினும் எக்காரணம் கொண்டும் உணவில் லாமை காரணமாக மனிதன் சாகவேண்டிய இயற்கை நிலைமை எதுவு மிருக்க வகையில்லை.