பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

||-.

அப்பாத்துரையம் - 46

இங்ஙனமிருந்தும் முதலாளித்துவத்தின் செயல் முறையின் விளை வாக உலகில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கானவர்கள் பட்டினியால் இறக்கின்றனர்! அது மட்டிலுமன்று. அவ்வுணவை உற்பத்தி செய்யும் உழவர்களுக்குக் கூட ஒரு நாளைக்கு ஒரு தடவை வயிறார உண்ண உணவு கிடைப்பதில்லை! இதன் காரணம் யாது? நிலமும் வேளாண்மையும் மனிதனுக்கு இயற்கை அளித்த பரிசுகள். ஆனால் இவ்வியற்கையின் பரிசுகளிலும் சில மக்கள் தனி உரிமை கொண்டாடினர். ஆதிகாலங்களில் இவ்வுரிமையை அவர்கள் தங்கள் மிருக பலத்தை வழங்கியே பெற்றனர். பின்னர் அது வரன்முறையாக மரபுரிமையாயிற்று. சமதர்மம் நிலத்தின் இத்தனியுரிமையை ஒழிக்கும். அவ்வுரிமை சமூகத்தின் உரிமையாயமையும், சமதர்மத்தின்படி பண்படுத்தும் வேளாளனுக்கும் அவன் ஆற்றலுக்கும் தேவைக்கும் தக்கபடி, நிலத்தைப் பயன்படுத்தும் உரிமையும் அளிக்கப்படும்.

சமதர்மத்தின் தொடக்கப்படியில், மிகப் பெரிய அளவில் நிலம் உடையவர்களாய், அதனைத் தாமே பண்படுத்தாம் லிருப்பவர்களிட மிருந்து மட்டுமே நில உரிமை அகற்றப்படும். இங்ஙனம் உரிமைக் குட்பட்ட நிலம் நிலமில்லா உழவுத் தொழிலாளரிடையேயும் சிறு குடியாண்மைக்கார ரிடையேயும் பங்கிடப்படும். ஆனால் இவ்வேறுபாடு பொருளியல் முறைப் படியும் அறிவியல் முறைப்படியும் நிலையான நிறைவளிக்கக் கூடிய திட்டமாயிருக்க முடியாது. பொருளுற் பத்தியில் எப்படியோ, அப்படியே நிலவிளைவிலும் தனியுடைமை எங்கும் போட்டியையும் மிகுதி உற்பத்தி அல்லது உற்பத்திக் குறையையும் உண்டு பண்ணுகிறது. மேலும் சிறு சிறு உடைமைகளாக இருக்கும் நிலையில் கூட நிலத்தின் தனியுரிமை மூலம் சமூகத் திற்கு மொத்தத்தில் தீமையே ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, நிலப்பண்ணைகளுக் கிடையிலுள்ள எல்லை வரப்புக்கள் விளைநிலத்தின் ஒரு பகுதியைக் குறைத்து விடுகின்றன. வரன் முறையாக உள்ள எல்லைப் பூசல்களும் வழக்குகளும் தரும் தொல்லைகள் வேறு. இவற்றால் குடியானவரிடையே பெருத்த மனக்கசப்பு உண்டாகிறது.

மேலும், இயந்திர உழுபடை (டிராக்டர்கள்), இயந்திரச் சூட்ட டிப்புக் கருவிகள் (Threshes), விதைக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றைப் பயன் படுத்துவதால் வேளாண்மையில் விளைவு