பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

23

மிகுதியாகும். இவ் வியந்திரங்கள் சிறு துண்டு நிலங்களில் பயன்படுத்தக் கூடாதவை. ஒரு தடவை உழுவதற்கே இவற்றுக்கு நூற்றுக்கணக்கான ‘ஏக்கர்’கள் தேவை. நிலம் பரந்திருப்பதன் நற்பயன் அறுவடையிலும் தானியச் சேமிப்பிலும் இது போலவே மிகுதியாகக் காணப்படுகிறது. இவற்றிலும், தற்காலப் புதுமுறை இயந்திரங்கள் காலத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்து பவையாயுள்ளன. வேளாண்மையோடு தொடர்புடைய கோழிப் பண்ணை,பால்பண்ணை, தோட்டப்பண்ணை முதலியவற்றிலும் இதே நிலைமை தான். விஞ்ஞானத் துறையின் முன்னேற்றம் வாய்ந்த முறைகளும் பெருவாரி உற்பத்தி முறைகளும் எவ்வளவு கடினமான உழைப்புடைய தனிப்பட்டகுடியானவர் முயற்சியை யும் விட பன்மடங்கு நற்பயன் தருபவையேயாகும்.

எனவே வேளாண்மை உச்ச அளவு விளைவு தருவதிலும் சமதர்மம் கூட்டுப்பண்ணை முறையை ஆதரிக்கிறது. இதன்படி பல ஊர்கள் தம் விளைநிலத்தைக் கூட்டாக ஒன்றுபடுத்தி இயந்திர உதவியுடன் பெருவாரியான உற்பத்தி செய்து பொது விளைவினால் வரும் ஆதாயத்தைப் பங்கிட்டுக் கொள்ளும்.

வினா (18): வேளாண்மையின் விளைச்சலை நீங்கள் பெருக்கலாம். ஆனால் அதனை எவ்வகையில் பயன்படுத்துவீர்கள்?

விடை : இன்று தொழில்துறை உற்பத்தியிலுள்ள அதே ஒழுங்கு தான் வேளாண்மைத் துறை உற்பத்தியிலும் உள்ளது. ஒவ்வொரு குடியானவனும் அவன் சிறிய அளவில் குடியானவனாயினும் பெரிய அளவில் குடியானவனாயினும் திட்டம் எதுவுமில்லாமலும் தொழில் நுட்பத் துறையைப் பற்றியோ வர்த்தகக் கள நிலவரம் பற்றியோ எத்தகைய அறிவுரையும் இல்லாமலும் தன் போக்கில் எதையானாலும் உற்பத்தி செய்துகொண்டே போகிறான். இதனால் சிலசமயம் தேவைக்கதிகமான விளைவும் சில சமயம் தேவைக்குப் போதா விளைவும் உண்டாகிறது. அதிக விளைவுக் காலத்தில் தானியங்கள் முட க்கம் அடைகின்றன. தேவையாளனிடம் அது சென்று சேருவதில்லை. சேரும்போதும் விலைகள் வீழ்ச்சி யடைவதால் குடியானவனுக்கு அவன் செலவு கூடக் கட்டுவ தில்லை. பெருத்த உடைமையாளர்கள் இவ்வகை நிலைஏற்படும் போது தானியங்களை அழித்து அதன் மூலம் போலியான