பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

அப்பாத்துரையம் - 46

செயற்கை அருந்தல் நிலையை உண்டு பண்ணுகின்றனர். தென் அமெரிக்காவில் எத்தனையோ தருணங்களில், நில முதலாளிகள் காப்பிக்கொட்டைகளுக்குத் தீ வைத்தும் கடலில் கொட்டியும் உள்ளனர். இதே செயல் அரிசி, கோதுமை, சோளம் முதலிய வற்றின் வகையிலும் நடை பெற்றுள்ளது. காய்கறிகள், பழங்கள் முட்டைகள், இறைச்சி முதலியவற்றில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இந்நிலையைக் காணலாம்.

இதற்கு நேர்மாறாக மழை பொய்த்துப்போதல், மிகுதி பனி வீழ்ச்சி, பெருவெள்ளம் முதலியவற்றின் பயனாக அருந்தல் நிலையும் சில சமயம் பஞ்சமும் ஏற்படுவதுண்டு. கால்வாய்கள், குழாய்க் கிணறுகள் வெட்டுவதன் மூலம் இது தடுக்கப்படக் கூடியது. மேலும் மழை எங்கும் பொய்த்து விடுவதில்லை. எல்லாச் சமயத்திலும் பொய்த்து விடுவதில்லை. வானிலை யாராய்ச்சி நிலையங்கள் போன்ற விஞ்ஞான உதவிகள் இத்தருணங்களில் குடியானவனுக்கு எத்தனையோ ஒத்தாசைகள் செய்ய முடியும்.

பல்வேறு வானிலையாராய்ச்சி நிலையங்களின் உதவிகளும் குடியானவர்களுக்கு எளிதில் கிடைக்கும்படி செய்வதே சமதர்ம அரசியலின் முதன்முதல் கடமையாகும். மழை வறட்சிக் காலத்தில் அரசியலின் வேளாண்மைத் துறையினர் குடியானவர்களிடம் நீர்மிகுதி வேண்டாத பயிர்களை விளைவிக்கும்படி அறிவுரை நல்க வேண்டும். அத்துடன் உடனடி உதவியாக விளைவு வள முடைய மற்றப் பகுதிகளிலிருந்து தானியங்கள் வரவழைக்க வேண்டும்.

குடியானவன் தானே உணவு உற்பத்தி செய்கிறவனாத லால், தனக்கு வேண்டிய உணவை அவன் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக அவன் வைத்துக் கொள்ளவே செய்கிறான். மிகுதிப்படியான தானியத்தை அவன் பயிரிடாதவர் களுக்கு விற்கிறான். அவன் வாடிக்கையாளர்களில் பெரும் பாலோர் நகரங்களிலும் பட்டணங்களிலும் வாழ்கிறார்கள். கிராமவாசிகள் நகரவாசிகள் ஆகியவர்களிடையே உள்ள விகிதாச்சாரம் தேசத்துக்குத் தேசம் மாறுபடுகிறது. இந்தியாவில் மக்கள் தொகையில் நூற்றுக்கு 80 பேர் குடியானவர். ஆனால் பிரிட்டனின் நிலைமை இதற்கு நேர்மாறானது. இதனால் பிரிட்டனில் நூற்றுக்கு 60 பங்கு உணவு வெளிநாட்டிலிருந்தே வருகிறது.