பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

அப்பாத்துரையம் - 46

வினா (19) : மருத்துவ அறிஞர், வழக்கறிஞர், அமைப்பியலார், எழுத்தாளர் முதலிய அறிவுத்துறை வகுப்பினர் நிலை யாது?

விடை : அறிவு வகுப்பு உற்பத்தியாளர் வகுப்பான தொழிலாளர் வகுப்பின் ஒரு கூறேயாகும். அவர்கள் சேவை சமதர்ம சமூகத்தில் மிக உயர்வாக மதிக்கப்படுதல் இயல்பே. சிறப்புப் பயிற்சியும் உடையவர்கள் என்ற மிகுதிப்படித் தகுதி உடைய காரணத்தால் அவர்கள் இன்றியமையா உறுப்புக்கள் ஆவர்.முதலாளித்துவ முறையின் கீழே கூட அவர்களில் சிலர் மிக உயர்தரச் சம்பளம் பெறுகின்றனர். பொதுப்படையாகத் தொழில் பற்றிய அறிவு முதலாளிக்கே இருப்பது கிடையாது. ஏனெனில் தொழிலில் அவன் கொள்ளும் பங்கு அவன் முதலீடே. ஆகவே அவன் தனக்குப் பகரம் தன் தொழிலை நடத்த நிபுணர்களை அமர்த்திக்கொள்கிறான். ஆனால் தொழிலில் பெருத்த ஆதாயம் வருகிறவரைதான் முதலாளி அவனுக்கு உயர்ந்த சம்பளம் கொடுக்க முடியும். ஆதாயம் உயர்ந்த அளவிலிருந்து குறைபடும்போது அறிவு வகுப்பினரின் நிலைமை உடனே பாதிக்கப்படு கிறது. பொருளியல் மந்தகாலத்தில் அதற்கேற்ற அளவில் தொழிலில்லாமை யும் துன்பமும் நேர்கின்றன. இவை இயந்திர உழைப்பு வகுப்பினரைவிட அறிவு வகுப்பையே மிகுதி தாக்குகின்றது. சமதர்மத்தில் தொழில் உற்பத்தி வளர்ச்சியும் வேளாண்மை வளர்ச்சியும் இரண்டும் ஒரே நிலையில் மக்கள் தேவையை ஒட்டி அமைக்கப்படுகின்றன. ஆதலால் அறிவு வகுப்புக்குத் தொடர்ச்சியான தொழில் சேவையும் வரவர மிகுதியான சேவையும் அதில் ஏற்படும்.

சமதர்மத்தைப் பற்றித் தெளிவற்ற, தவறான கருத்துக்களை யுடையவர்கள் அதன் பயனாக, 'அது சம்பளத்தை ஒரே சரிமட்டமாக்கும் முறை' என்று எண்ணுகின்றனர். இதைவிடத் தவறான செய்தி இருக்க முடியாது. நாம் மேற்குறிப்பிட்ட முறையில் ஊதியம் திறமைக்குத் தக்கபடி கொடுக்கப்படுவ தானால் தொழில், ரசாயனம், சட்டம், அறுவை மருத்துவம், கலை, சிற்பம் முதலிய தனித்துறைகளில் சிறப்பறிவுடைய ய வர்களுக்கு மிகுதியான ஊதியம் தரப்படும் என்பது கூறாமலே அமையும்.