பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

27

சமதர்மத்தின் கீழ் இன்னும் ஒரு நன்மை இருக்கும். தற்போது கல்வி பொதுவாகவும் சிறப்பாக உயர்தரக் கல்வியும் மிகவும் செலவு பிடிப்பதா யுள்ளது. இக்காரணத்தினால்தான் அறிவு வகுப்பினரில் பெரும்பாலோர் செல்வ நிலையுள்ள வகுப்பிலிருந்தே பிறக்கின்றனர். தொழிலாளிகளின் பிள்ளை களுக்கு அக்கல்வி கிடைக்க முடிகிறதில்லை. சமதர்மத்தின் கீழோ, தொடக்க, உயர்தரக் கல்விகள் யாவும் இலவசமாகவே யிருக்கும். மாணவன் தன் கைச்செலவு பற்றிய கவலையினால் கல்வியடைய முடியாமல் திக்குமுக்காட வேண்டியதில்லை. இன்றுள்ள நிலையில் மருத்துவ அறிஞராவதற்குப் பல ஆண்டுகள் பெருஞ்செலவில் பயிலவேண்டு மென்பதற்காகப்

பல

மாணவர்கள் அதனை விடவேண்டியிருக்கிறது. இங்ஙனம் சமதர்மம் தற்போதைய அறிவு வகுப்புக்கு நலமாயிருப்பது டனன்றி உயர்தரக் கல்வியை இலவசமாக்குவதன் மூலம் அது அவ் வகுப்பினரின் தொகையையும் பெருக்கும்.

வினா (20) வணிக வகுப்பின் மதிப்பு என்னவாயிருக்கும்?

விடை : இன்று வணிக வகுப்பு முதலாளித்துவ முறையின் ஒரு பகுதியாகிவிட்டது. ஏனெனில் அவ்வகுப்பினர் பொருள் களைப் பரப்பி வழங்குவதற்கான பணியாற்றுவதுடன் முதலாளி களைப் போலவே உற்பத்திச் செலவுக்கு மேற்பட்ட ஆதாயத்தில் ஒரு பங்கு கொள்கின்றனர். அதாவது முதலாளியும் வணிகனும் ஆதாயத்தைப் பங்கிட்டுக் கொள்கின்றனர். அவர்களிருவரும் ஒரே வகுப்பின் உள்ளுறுப்புக்களே. முதலாளி (தொழிலாளி யிடமிருந்து உச்ச அளவு பெற்றுக் குறைந்த அளவு கொடுப்பது) போலப் பெருத்த வணிகனும் (அதாவது மொத்த வர்த்தகனும்) அவனிடம் வாங்கி விற்பனை செய்யும் சிறுவர்த்தகர்களைச் சுரண்டுகிறான். இச்சிறு வர்த்தகனே தேவையாளராகிய பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்கிறான். எனவே சிறுவர்த்தகன் எப்போதும் கையும் வாயுமாகச் சிறு வாழ்வு வாழ்கிறான். மொத்த வணிகனோ மட்டற்ற செல்வ முடைய வனாகிறான். இரண்டாவதாக வணிகன் தொழிலில் முதலிடப் பணம் உடையவனாயிருப்பதனால்தான் வணிகனா யிருக்கிறான். சிறு வர்த்தகன் இந்நிலை பெறுவதில்லை. எனவே பெரு வர்த்தகன் உண்மையில் முதலாளியுடன் சேர்த்து எண்ணத் தக்கவனே.