பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

||_ _ _

அப்பாத்துரையம் - 46

சமதர்மத்தின் கீழும் வினியோக சாதனங்கள் வேண்டிய தாகவே இருக்கும். ஆனால் அவற்றிற்கான முதலீடு, அரசிய லாரால் போடப்படும். இது கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஒரு நல்ல விளைநிலமாயிருக்கும். தேவையாளர் மொத்த விலைக்கு வாங்குவதற்கான தம் சொந்த அமைப்பைத் தாமே தொடங்குவர். முன்பு வணிகன் கைப்பற்றியிருந்த ஆதாயம் முழுவதையும் இங்ஙனம் அவர்கள் அவனிடமிருந்து அகற்றித் தமதாகப் பெறுவர்.

வணிக வகுப்பு மிகவும் பழங்காலத்திற்குரியது. பழைய நில உரிமை யாட்சிக் (Feudalism) காலத்திலேயே அது இருந்தது. வணிக வகுப்பும் நிதி நிலையத்தினரும் கூட்டாகச் சேர்ந்த வணிக முதலாளித்துவம் ஏற்பட்டது. வணிக முதலாளித்துவத்திற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு பிரிட்டீஷ் கிழக்கிந்திய வணிகர் கழகம் ஆகும். இது இந்தியாவில் பிரிட்டீஷ் பேரரசின் அடிப்படையை நிறுவியதுடன் தற்கால ஏகாதி பத்தியத்துக்கும் முன்னோடியாயிருந்தது. வணிக முதலாளிகள் வெளிநாடு களிலிருந்து சரக்குகளை மிகக் குறைந்த விலையில் வாங்கித் தங்கள் நாட்டில் மிக உயர்ந்த விலையில் விற்றனர். இதனால் மிகப் பேரளவில் ஆதாயம் அவர்கள் கையில் சேர்ந்தது. அவர்கள் விற்றல் வாங்குதல் செய்வது மட்டுமன்றிப் பெரும் செல்வமும் தொகுத்து மன்னர்களுக்கும் மன்னர் ஆட்சிகளுக்கும் கடன் கொடுத்து வந்தனர். அவர்கள் பெருத்த அரசியல் செல்வாக்கு பெற்றுச் சொந்தப் படைகளும் சொந்த அரசியல் நிர்வாகமும் உடையவர்களாயினர். அவர்கள் செல்வம் பின்னும் பெருகத் தொடங்கிய பின் முதலிடுவதற்கான இடம் கோரி அவர்கள் ஆரவாரம் செய்தனர். இச்செல்வம், கையால் ஓட்டப்படாமல் நீராவியால் ஓட்டப்பட்ட இயந்திரங்களில் விடுமுதலாக இடப்பட்டது. படிப்படியாக இந்நீராவி இயந்திரங்கள் தனிப்பட்ட சிறு கைத்தொழில்களைப் பின்தங்கிவிடச் செய்தன. தொழிற்புரட்சி ஏற்பட்ட வகை இதுவே. தற்கால முதலாளித் துவம் இவ்வகையில்தான் பிறந்தது. வணிக முதலாளித்துவம் உண்மையில் முதலாளித்துவத்தின் தந்தையே ஆகும்.