பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

29

வினா (21) : நிதித்துறை, நிதித்துறையாளர் பற்றி பலப் பல பேசுகின்றீர்கள். முதலாளித்துவத்தில் அவர்கள் பங்கு யாது?

விடை : தற்கால முதலாளித்துவம் பிறப்பதற்கு நெடுநாள் முன்பிருந்தே நிதியாளர் இருந்து வந்துள்ளனர். அவர்கள் ஒரு வகையில் நம் கடன் தொழிலாளரின் (வட்டிக்கடைக்காரரின்) ஒரு புதிய உயர் பதிப்பேயாவர். ஆயினும் இவ்விருதரப்பார் ஒற்றுமையும் இத்துடன் நின்று விடுகிறது. ஏனெனில் கடன் தொழிலாளர் தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுத்து அதில் வட்டி வாங்குகின்றனர்; நிதியாளரோ வேறு யாராவது பாதுகாப்புக்காகத் தம்மிடம் வைத்துள்ள நிதியைக் கடன் கொடுக்கின்றனர். இப்போது அவர்கள் தங்களால் கொண்டு செல்ல முடியாத அவ்வளவு பெரும் தொகைகளை வைத்துக் கொண்டு தொழில் செய்கின்றனர். ஆகவே அவர்கள் நம்பிக்கை யுள்ள ஒருவரிடம் அதைப் போட்டு வைத்து வேண்டிய சமயம் பெற்றுக் கொள்கின்றனர். இங்ஙனம் பணம் கையிருப்பில் பெற்றவர்கள் பணம் போடுபவர் எவரேனும் ஒரு சமயம் பணத்தைப் பெற்றுக் கொண்டாலும் எப்போதுமே பலர் பணம் பேரளவில் தம்மிடம் இருந்து வருவதைக் கண்டனர். ஆகவேதான் இந்நிதியாளர் வட்டிக்குப் பணம் தேவையானவர்களுக்கு அதனைக் கொடுத்து வாங்குவதில் எத்தகைய தீங்குமில்லை என்ற நிலை எய்தினர். பணத்தைத் திருப்பிப் பெறுவதற்குப் பதிலாக நிதியாளர் வழக்கமாக ஏதேனும் பிணையம் (Security) பெற்றுக் கொள்வர். இங்ஙனமாக நிதியாளர் பிறர் செல்வத்தை வைத்துக் கொண்டே அதில் ஆதாயமுமடைகின்றனர்.

உலகில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது பணம் மிகுதி. இரு நூற்றாண்டுகளுக்கு முன்னிருந் ததைவிட அது இன்னும் பன்மடங்கு மிகுதியே. இந்நிலைக்குக் காரணம் தொழிற்துறைகள் எழுந்தபின் முன்னைவிடப் பெருத்த அளவில் இன்னும் உற்பத்தி நடக்கின்றது. அதன் ஒவ்வொரு பகுதியிலும் பண்டமாற்றுக்காக வரவர மிகுதியான பணம் தேவைப்படுகின்றது. ஆகவே பொதுமக்களிடமிருந்து பொருள் போட்டு வைக்கப் பெறுகிறவர்களும் சிறப்பிலும் பொருள் மிகுதியிலும் மேம்பட்டுள்ள னர். பழங்கால நிதியாளன் அல்லது நிதியாளர் கூட்டுறவுக்குப் பகரம் இப்போது நிதியகக் கழகங்கள் (பாங்கிங் கார்ப்ப ரேஷன்) ஏற்பட்டுள்ளன. அவை தொழி