பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30 || |---

அப்பாத்துரையம் - 46

லாற்றும் வகை எதுவெனக் கவனித்துப் பாருங்கள். ஒருவன் நடப்புத்துறைக் கணக்கில் (கரண்ட் அக்கவுண்ட்) பணமிடுகிறான். இதில் போட்ட பணத்தை வேண்டும்போது திருப்பிப் பெறும் உரிமையை அவன் பெறுகிறான். இதற்காக அவனிடம் ஒரு பொருள் முறிப்புத்தகம் (செக்-புக்) தரப்படுகிறது. அவன் மாதம் ரூ.400 போட்டு வைத்து வாரந்தோறும் ரூ.100 அவன் செலவு களுக்காக எடுத்துக் கொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம். வேறு ஒருவர் அடுத்த வாரம் இதே தொகை போட்டு இதே அளவில் எடுக்கிறார். அதற்கடுத்த வாரமும் இதே போல ன்னொருவராக ஐந்து வாரத்தில் ஐந்து பேர் போடுகிறார்கள். இறுதியில் ஐந்துபேர் மாதம் ரூ.2000 நிதியகத்தில் போட்டு அதிலிருந்து (மாதத்துக்கு நான்கு வாரங்கள் மட்டுமே என்று வசதிக்காக இங்கே வைத்துக்கொள்வோம்) அப்பணம் முழுவதையும் வாரா வாரமாக எடுத்துக் கொண்டு விடுகின்றனர் என்று நிதியகத்தார் காண்கின்றனர். நிதியகத்தில் இப்போது தொடப்படாமலே ரூ. 1,250 முதலிருப்பு தங்கி யிருக்கிறது. இது இன்னலில்லாமல் கடன் கொடுக்கப்படலாம். அதிலிருந்து வரும் வட்டி நூற்றுக்கு 5 வரையிருக்கும் என்று கொள்ளலாம். இங்ஙன மாகத் தற்கால நிதியகம் ஆயிரக்கணக்கானவர்கள் பணம் போடுமிடமாகிறது. ஆகவே இத்தொழிலில் மொத்தத்தில் வரும் பணம் கோடிக்கணக்காய் விடுகிறது.

இவ்வளவும் நடப்பு வைப்பீடுகள், நிலை வைப்பீடுகள் (ஃபிக்ஸட் டெபாஸிட்ஸ்) வேறு. இதில் போடும் பணத்தை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்கு, பொதுவாக ஓராண்டுக் காலத்துக்கு எடுப்பதில்லை என்று உறுதி கூறுகிறோம். இப் பொருளில் நூற்றுக்கு 2 வரை வட்டி கிடைக்கிறது. நம்மைப் போல் இன்னும் பலர் பணம் போடுவர். ஆகவே, நிதியகத்தில் நெடுநாள் தொடப்படாமல் இருக்கும் தொகை பெரிதாகிறது. (குறிப்பிட்ட வரையறைக்குமுன் நாம் பணம் பெறப்படா தென்றில்லை. ஆனால் பெறுவதானால் போட்ட பணத்தில் குறைவாகவே பெறலாம்) இப்பணம் 5 முதல் 15 சதமானம் வரை வட்டியுடன் திரும்பவும் கடன் கொடுக்க உதவுகிறது.வட்டியின் அளவு கடன் கொடுக்கும் நிலையத்தின் மதிப்பையும் தவணைக் காலத்தையும் பொறுத்திருக்கும். இப்பணம் நம் நிலை வைப்பீட்டில் நமக்குக் கொடுத்த நூற்றுக்கு 2 வட்டியும்