பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

31

எச்செலவும் போகக் குறைந்த அளவு நிதியகத்துக்கு நூற்றுக்கு 3 கிடைக்கும். இது பணம் போட்ட நமக்குக் கிடைப்பதை விடக் கூடுதலாகும். சுருங்கச் சொல்வ தானால் நிதியாளர்கள் என்றும் உற்பத்தி செய்வதுமில்லை. தம் சொந்தப் பணத்தைப் பயன் படுத்திக் கொள்வதுமில்லை. ஆயினும் அவை ஆதாயமடை கின்றன. தற்போதைய சமூக முறைக்கு இவர்கள் உண்மையிலேயே ஒப்பற்ற தலைவர்கள்தான்!

வினா (22) : நீங்கள் கூறுகிறபடி தொழில்துறைகளை வாங்கப் போதிய பணம் முதலாளியிடம் இருக்குமானால் நிதியகங்களிலிருந்து இங்ஙனம் பணம் வாங்கத் தேவை என்ன?

விடை : முதலாளி (வசதியை முன்னிட்டு அவனை ஒரு தனிப்பட்ட மனிதனாகக் கருதுவோம்) தன் பொருளை ஒரு தொழிலில் முதலீடாக இடுகிறான் அதன்பின் அவனுக்கு நடப்பு முதலீடு அதாவது மூலப் பொருள்கள், சம்பளங்கள், இயந்திரப் பாதுகாப்புச் செலவு, தொழிற் சாலைச் செலவு ஆகிய உடனடிச் செலவுகளுக்கான பணம் வேண்டும். மேலும் உற்பத்தி செய்த பொருள்கள் விற்கச் சிறிது காலம் பிடிக்கும். அவனுக்கும் போதிய பண வசதியிருந்தால், இந்நடப்பு முதலீட்டையும் அவனே போட முடியும். அவனிடம் அது இல்லாவிட்டால் தன் தொழிற் சாலையைப் பிணையமாக வைத்துச் சிறு தவணைக்குப் பணம் கடன் பெறுகிறான். நிதியகங்களும் இதனை வரவேற் கின்றன. ஏனெனில் அந்நிதியகத்தவர்களுக்குத் தொழிற்சாலை நல்ல பிணையமாகிறது. தவிர சிறு தவணைக்கு வட்டியும் மிகுதி. இதற்கிடையில் கடன் கொடுக்குமுன், 'தொழிற்சாலை நல்ல நிலையிலிருக்கிறது, அதாவது அது உற்பத்தி செய்யும் சரக்குகள் வர்த்தகத்துக் கள விற்பனைக் குரியவையே, விற்காது கிடப்பவை யல்ல' என்று நிதியகத்தார் உறுதியறிந்து கொள்வர். பொதுவாக தொழில் நிலையம் நல்ல நிலை பெற்ற பின்னர் நிதியகங்கள் அவற்றுக்குக் கடன் கொடுக்கமாட்டா.

வினா (23) : ஒரு முதலாளி தன் முதலீட்டைத் தானே போடாமல் கடன் வாங்குவது அறிவற்ற செயல் எனறு நீங்கள் நினைக்கவில்லையா?

விடை : தொடக்க ஆண்டுகளில் ஒரு தொழில்நிலையம் கடன் பெறுவதற்கு முட்டுப்பாடடையும்; அச்சமயம் அது தன் முதலீட்டையே நம்ப வேண்டும். அவன் உற்பத்தி செய்யும் சரக்கு