பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(32) ||

அப்பாத்துரையம் - 46

று

வர்த்தகக் களத்தில் எங்ஙனம் விற்பனையாகும் என்று உறுதியில்லாததால் எந்த நிதிநிலையமும் அதற்குக் கடன் கொடாது. ஆனால் நிச்சயம் ஒரு தடவை வர்த்தகக் களத்தில் விற்பனை நின்றுவிட்ட பின் அதாவது சரக்குகளுக்குத் தொடர்ச்சியான விற்பனை வசதியைப் பெற்றுவிட்டபின், நிதியகம் நம்பிக்கையுறுதி பெறுகிறது. இங்ஙனம் இத்தருணங் களில் பணம் கடன் வாங்குவதில் தீமையோ நட்டமோ எதுவும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் அதனை எப்போதும் திருப்பிக் கொடுத்துவிட முடியும். வட்டி சிறிது உயர்வானாலும் சரக்கு விற்பனையின் ஆதாயம் அதனைச் சரிசெய்துவிடும். எடுத்துக் காட்டாக ஒரு சரக்கு நூற்றுக்கு 15 ஆதாயம் தருகிறதானால் நூற்றுக்கு 5 வட்டி கொடுப்பதில் என்ன கேடு வரக்கூடும்! நிலையத்தினருக்குச் சொந்தப்பணம் இருக்கும்போது நடப்பு முதலீட்டை நிதியகத்திலிருந்து வாங்கினால் கூட அது நல்ல தொழில் முறையேயாகும். அது இன்னும் மிகுதி இயந்திரம், தளவாடங்களில் இடப்படலாம். இவையெல்லாவற்றாலும் உற்பத்தி பெருகவே செய்யும். இங்கும் நிதியகத்திற்கு நூற்றுக்கு 5ம் தொழிலகத்துக்கு 10ம் என்ற ஒழுங்கு அமையும். இதில் முதலாளியின் நிலையே சிறந்தது.

வினா (24) : நாம் சுற்றிவரக் காணும் எல்லாத் தொழில்களும் முதலாளிகளுக்குரியவைதானா? அவை அவர்கள் முதலீட்டிலிருந்து உண்டாகுபவைதானா?

விடை : தொழில் துறையிலீடுபடுத்தப்பட்ட முதல் முழுவதும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் உரியதல்ல, தனிப் பட்ட நிதி நிலையத் தாருக்கும் உரியதல்ல. ஏனெனில் அடிக்கடி முதலாளிகள் ஒருங்குகூடித் தொழில் நிலையங்கள் நிறுவு கின்றனர். இன்னும் பல தறுவாய்களில் அவர்கள் பங்குசேர்த்துப் பொதுமக்கள் பணத்தை வைத்துச் செயலாற்று கின்றனர். உண்மையில் தொழில் துறையின் பெரும்பகுதி சிறு முத லீட்டாளனுக்குரியதே. அதன் ஆதிக்கம் மட்டுமே முதலாளியின் கையிலுள்ளது.

முதலாளி செய்வது இது; சரக்குகள் செய்ய, மின்சாரம் உண்டு பண்ண அல்லது இதுபோன்ற செயலுக்காக அவன் ஒரு நிலையத்தை இயக்கி விடுகிறான். இதற்கு வேண்டும் பொருள்