பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

33

ரூ.10,00,000 என்று வைத்துக் கொள்வோம். அவன் அதை 10,00,000 பங்குகளாகப் பிரிக்கிறான். பங்கு ரூ.1 ஆக அதைப் பொதுமக்கள் வாங்கும்படி இணக்கமளிக்கிறான். நிலையம்

தாடங்கு

வோனாக அதாவது அதன் முதல்வனாக அவன் தனக்கு ரூ.100க்கு 51 பங்கு வைத்துக் கொள்வதில் கருத்தாயிருந்துகொண்டு மீதி 100க்கு 49 பங்கைப் பொதுமக்கள் வாங்கும்படி செய்கிறான். நிலையத்தின் காரியங்கள் எல்லாம் பங்குக்காரர்களின் மொழித்திற மூலமே நடைபெறுவ தனால், அவன் பக்கம் எப்போதும் பெரும் பான்மை வலு இருக்கும் என்பது உறுதி. அவனே நிலையத்தின் நிர்வாகியாய் அதற்கான நிலையத்திலிருந்து ஊதியமும் பெறுகிறான். அவன் ஆதிக்கம் வகிக்கும் வகை இது.

ஆயினும் காரியங்கள் எப்போதும் இவ்வண்ணம் நடை பெறுவதில்லை.ஒரே முதலாளியிடம் இதில் முதலிடுவதற் கான ரூ. 5,01,000ம் இருப்பதில்லை. அப்போது அவன் இன்னொரு முதலாளியையோ அல்லது இன்னும் சில பல முதலாளிகளையோ தன்னுடன் சேர்த்துக் கொண்டு அனைவருமாக 100க்கு 51 பங்கு டுத்து அனைவருமாக அதில் ஆதிக்க நலம் பெறுவர். ஆனால் ஆதிக்கநலம் இதனிலும் குறைந்த பொறுப்புடன் கூடக் கிடைக்க முடியும். ஒரு மாதிரி எடுத்துக்காட்டுக் கூறுவோம். வெளியீட்டுப் பங்கு முதலீடு (Issued Share Capital) பொதுவாகத் தேவைக்கு இரட்டிப்பு மடங்கு பெருக்கப்படும். இதன்படி மேற்குறிப்பிட்ட நிலையத்தின் பங்கு முதலீடு ரூ.10,00,000க்குப் பதிவு செய்யப்படும். ஆனால் ரூ. 5 லட்சமே செலுத்தப்பட்ட முதலீடாக (Subscribed Capital)

ணக்கமளிக்கப்படும். இதில் முதலாளி 100க்கு 51 வாங்குகிறான். அதாவது 2 லட்சத்துக்குச் சற்று மேற்பட வாங்குகிறான். இம்முயற்சி வெற்றி பெற்று அவனுக்கு 100க்கு 51 ஆதாயப் பங்கு கிடைத்த தென்று வைத்துக்கொள்வோம். நிதியகத்தில் போட்டு வைப்பதின் மேல் இது 7 பங்கு மிகுதி. ஆகவே இப்பங்குகளை வாங்க யாவரும் நெருக்கித்தள்ளி வருவர். இவை பொதுவிலைக் களத்தில் கிடைப்பதாதலால் போட்டி மிகுந்து விலையேறும். ஒரு ரூபாய் பங்கு அதன் முகப்பு விலையைப் போல் மூன்று நான்கு மடங்கு விலைதரும். ஆதிக்க உரிமையுடைய முதலாளி முகப்பு விலையிலேயே அத்தனைப் பங்கையும் வாங்கிவிடவும் செய்யலாம். இங்ஙனம் செய்தால் ஆண்டுதோறும் இவ்வுயர் ஆதாயப் பங்கைப் பெறுவான். அல்லது அவன் அதன் உயர்ந்த