பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

அப்பாத்துரையம் - 46

விலைக்கள மதிப்பின்படியே அதனைத் திரும்ப விற்றும் ஆதாயம் பெறுவான். இங்ஙனம் செய்வதால் அவன் இதற்குமுன் தொழிலிலிட்ட முதல் முழுவதையும் மீண்டும் பெற்றுக் கொண்டு அதன் மேலும் 100க்கு 51 பங்குக்கு உரிமையுடையவனாயிருப்பான்!

இது மட்டுமோ? இந்த 100க்கு 51 பங்கைக்கூட - இதுவும் உண்மையில் மொத்தத்தில் 100க்கு 25 1/2 பங்கு தான் - அவன் பெற்றுத் தீரவேண்டு மென்பதில்லை. முதலாவதாக ஒரு நிலையத்தின் பொதுக் கூட்டத்திற்குப் பங்கு தாரர்கள் எல்லாரையும் வரவழைத்து விடுவதில்லை. அவர்களில் பொதுவாகப் பலர் வராமலே இருப்பர். இரண்டாவதாக எப்போதுமே பங்குதாரர்களில் சிலரை அவர்கள் தம்பக்கம் சேர்த்துக் கொள்ளவும் முடியும். பங்குதாரர்களுடைய மனப்பான்மையோ தம் முதலீடு பத்திரமாயிருக்க வேண்டும் என்பதும் போதிய ஆதாயப்பங்கு வரவேண்டும் என்பதும் தான். தொழிலில் யார் ஆதிக்கம் வகிக்கின்றனர் என்பதில் அவர் களுக்குப் பொதுவாகக் கவலை கிடையாது. எனவே சிறு பங்குக்காரர்கள் கிட்டத்தட்டப் பாதிப் பணத்தை முதலிட்டவர் களாயினும், முதலாளியே ஆதாயத்தில் பெரும்பகுதி கொள் பவனாகிறான்.

முயற்சி வெற்றியடைவதுபோலத் தோல்வியுறவும் கூடும். இங்கும் தொழில் நிலையச் சட்டம் முதலாளிக்குப் பாது காப்பளிக்கிறது.பங்குதாரர்களுக்கு அவர்கள் நட்டத்தை அவன் சரி செய்து கொடுக்க வேண்டிய தில்லை.

முடிவாகக் கூறினால் இவை எல்லாவற்றின் முடிந்த சுருக்கம் இதுதான் முதலாளி தொடக்கத்திலேயே ஒரு சலுகையுடன் தொடங்குகிறான். அதாவது தொழில் நிலையம் தொடங்குவதற்குரிய ஒரு பெருந் தொகையுடன் அவன் செயலாற்ற முற்படுகிறான். அது அவன் முதலிடும் அளவைவிட நாலு மடங்காக மதிப்பிடப்படுகிறது என்று கூறலாம். அதன் மீத மதிப்பை அவன் மக்களிடமிருந்து பங்காகச் சேர்க்கிறான். தன் ஊழியர்களுக்கு அவன் குறைந்த அளவு தொகை கொடுத்தனுப்பி விட்டுத் தனக்கு அதை உற்பத்தி செய்யப்பிடித்த தொகையைவிட மிகுதியான விலையில் அதை விற்கிறான்.