பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

35

வினா (25) : நடப்பு இதுவானால், நாமும் ஏன் முதலாளி ஆகக் கூடாது? அதில் ஒவ்வொரு படியிலும் ஆதாயமே யிருப்பதாகக் காணப்படுகிறதே.

விடை : சிறியோராகிய உங்கட்கு இது எப்போதும் முடிவதன்று. உண்மையில் முடியாதது என்று கூடக் கூறலாம்.நீ ஈட்டுவதிலிருந்து ஒரு செல்வனாகுமளவு நீ பணம் மீத்துவைப்ப தென்பது முடிகிற காரியமா. கணித்துப் பார்த்து அது முடியாதது என்பதைக் கவனிக்க, இரண்டாவது ஒரு சிறு அளவு செல்வத்தை நீ சேர்த்துவிட்டாலும் எப்போதும் உள்ள போட்டி அப்போதும் இருக்கும். அதில் வரும் இடையூறுகள் எப்போதுமே ஒரு பொது மனிதனால் தாங்கக் கூடியதல்ல. நீ ஒரு தொழில் நிலையம் நிறுவத் துணிந்தால், ஒரு போட்டி முதலாளி விலைவெட்டுப் போட்டியிலிறங்குவான். நீ உன் விலையைக் குறைக்கும்படி கட்டாயப் படுத்தப்படுவாய். இது முழு நட்டமாகும். மேலும் போட்டியினால் நீ சம்பளங் குறைக்க வேண்டிவரும். அதனால் உன் ஊழியரிடையே மனக்கசப்பு ஏற்பட்டு அவர்கள் உன் தொழிலை விட்டுப் போகாமலே ஒன்றுபட்டு வேலை நிறுத்தம் செய்து உன் தொழிலை அழிக்க முற்பட்டாலும் முற்படுவர். இப்படியாக உனக்குப் பெரிய, விலக்க முடியாத இடர்கள் உண்டாகும். அதற்கிடையே உன் போட்டியெதிரியிடம் கூடுதல் பணமும் கூடுதல் கடன் நம்பிக்கைப் பொறுப்பும் இருப்பதனால் உன் தோல்வியை அவன் தன் வெற்றி யாக்கிக் கொள்வான். பண நெருக்கடி யிலுள்ள மற்றவர்களைப் போல நீயும் வட்டிக்கார னிடம் போக வேண்டிவரும். உன்வகையில் இது நிதியகமாகவே யிருக்கும். நிதியகத்தார் உன் இடைஞ்சல் நிலையைக் கண்டு பிறரைவிட உன்னிடம் மிகுதி வட்டிவீதம் கோருவர். இதற்கு நீ ஒத்துக்கொண்டால் இதனால் தொழிலின் தடங்கல்கள் பெருகி நீ கடனை அடைக்க முடியாமல் போய்விடும். அதன்பின் நிதியகம் உனக்கெதிராக வழக்குமன்றத் தீர்ப்பு பெறும், அல்லது நிலையத்தில் ஆதிக்கப் பங்கு கோரும். அதன்பின் நிதியகம் உன்னை முற்றிலும் வெளியேற்றிவிடலாம் அல்லது உன்னை வைத்துக்கொண்டு ஆதாயத்தின் பெரும்பகுதியைத் தான் பெற்று வரலாம். அன்றி அது தன் பங்குகளை யெல்லாம் அவற்றை வாங்கத் துடித்துக்கொண்டிருக்கும் உன் எதிரிக்கே விற்றுவிடவும் செய்யக்கூடும். இவ்வாறு முதலாளியா யிருக்க வேண்டுமானால்