பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

-

அப்பாத்துரையம் - 46

தாடக்கத்திலிருந்து ஒரு கணிசமான அளவு செல்வம் உன்னிடமிருக்கவேண்டுவது இன்றியமையாத தாகும். இறுதியாக, ஆராய்ந்து பார்த்தால் தொழில்துறையின் ஆதிக்கம் நிதியகத்தின் நலன்களுக்குரியவன் அதாவது நிதியாளன் கையிலேயே உள்ளது. எனவே முதலாளியாக மட்டும் இருந்தால் போதாது சற்று மிகுதி முதலுடைய முதலாளியாகவும் இருக்க வேண்டும். நிதியகத் தானாகவும் இருந்தால் இன்னும் நன்று. மற்ற முதலாளிகளுடன் சேர்ந்து ஒரு பொறுப்புக்குழு (ட்ரஸ்ட்) ஆயிருந்தால் இதனினும் சிறப்பு. மொத்தத்தில் முதலாளித்துவம் என்ற முறை மேன்மேலும் செல்வத்தை ஓரிடம் குவிக்கப் பயன்படும் முறையேயாகும். எனினும் இக் காரணத்தால் கூட முதலாளித்துவம் உறுதியும் பாதுகாப்பும் உடைய முறையன்று. உண்மையில் முதலாளித்துவம் இன்று செல்லும் போக்கு பித்தவெறி கொண்டலைபவன் போக்கேயாகும். இப் பொய்வாழ்வுக் 'குமிழி' ஒரு நாள் வெடித்தே தீரவேண்டும். முதலாளித்துவ முறை அழிவை நோக்கித் தலைகுப்புற விழுந்து கொண்டிருக்கும் ஒன்றேயாகும்.

வினா (26) : முதலாளியின் முதல் பெரிதாகுந்தோறும் அவன் முதலீட்டுக்குப் பாதுகாப்பு மிகுதி; அவன் ஆதாயம் மிகுதி. அப்படியிருக்க, முதலாளித்துவ முறை அழிவை நோக்கித் தலைகுப்புற விழுந்து கொண்டிருக்கிறது என்பது எங்ஙனம்?

விடை : ஒரு சிலரிடத்தில் பணம் எவ்வளவு குவிகிறதோ, அவ்வளவுக்குப் பொதுமக்களிடையே வறுமை மிகும். மிகத் தீவிரத் தறுவாய்களில் மக்கள் கிளர்ந்தெழுந்து ரஷ்யாவில் நடைபெற்றது போல அதனை அழிக்க முற்படுவர். சென்ற உலகப் போருக்குப்பின் பல நாடுகளில் கிளர்ச்சிகள் ஏற்பட்டன; ஆனால் மக்கள் ஒன்றுபடாததினாலோ, வெளிநாட்டு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் உதவியினாலோ அவ்வவ் விடத்து முதலாளிகள் மக்களை அடக்கித் தம் வல்லமையை மீண்டும் நிலைநாட்டினர். இதற்கு நேர்மாறாக ரஷ்யாவில் முதலாளித்துவம் முற்றிலும் முறியடிக்கப்பட்டு, சமதர்மத்தையே குறிக்கோளாகக் கொண்ட உழைப்பாளிகள் ஆட்சி நிறுவப்பட்டது.

வேறு வகைகளிலும் முதலாளித்துவம் விரைந்த இறக்கப் பாதையில் செல்வதுண்டு. இது வேலைநிறுத்தம், விலை மந்தம்