பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

37

ஆகியவைகளால் ஆகும். இவை தீவிரமாகும்போது நெருக்கடி ஏற்படும். நெருக்கடி நிலைமை என்பது தீவிர சமூகப் போராட்டம் ஏற்பட்டு அதன் பயனாகப் பொருளியல் முறையில் தடங்கலும் முட்டுக்கட்டை நிலையும் உண்டாவதாகும். இதன் எதிரொலிகள் அரசியலிலும் ஆட்சியாளரிடையிலும் காணப்படும். முட்டுக் கட்டை தீர்க்க முடியாததாகிச் சச்சரவுகள் பெருகும்போது சில சமயம் உள்நாட்டுப் போர் எழுகிறது. வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டின் முதலாளிகள் அடிக்கடி மற்ற நாடுகளின் முதலாளி களிடமிருந்து படை உதவி கோருவதும் உண்டு. சில சமயங்களில் வேறொரு நாட்டின்மீது போர் தொடுத்து அதன் மூலம் நெருக்கடி தீர்க்கவும் முயற்சி செய்யப் படும். எதிரி முதலாளி நாடுகளின் தொழிற் செல்வங்களை நட்ட ஈடாகப் பெறும் எண்ணத்துடன் இப்போர்கள் நடத்தப் பெறுகின்றன. அத்துடன் வெல்லப்பட்ட நாட்டு மக்கள் தங்கள் சரக்குகளின் எதிர்கால விற்பனைக் களத்தினராவர் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. அடிக்கடி தன் அக நெருக்கடியை தீர்க்க முதலாளித்துவம் போரையே நற்கருவியாக நாடுகிறது.போர்களும் வரவர அழிவுப் போர்களாய் வருகின்றன. ஏனெனில் இன்று ஏற்பட்டுள்ள நுணுக்கத் துறை மேம்பாடுகளால் மிகவும் அழிமதி செய்யும் படைக்கருவிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

வினா (27) : மிகமிக நன்று. பொருளியல்துறையை மட்டிலும் ஆராய்ந்தே நீங்கள் இம்முடிவுகளுக்கு வந்துள்ளீர்கள். ஆனால் அரசியலைப் பற்றி நீங்கள் கருத்துச் செலுத்தவில்லை. ஆனால் இன்றோ நம் வாழ்வில் அதுவே பெரும் பங்குடையதாயிருக்கிறது.

விடை:மனிதனின் முக்கிய ஈடுபாடு தனி முறையிலும் சரி, குழு முறையிலும் சரி, பிழைப்புக்கு வழி தேடுவதுதான். ஆகவே சமதர்மம் பொருளியல் துறையையே நம் அரசியல் வாழ்வின் அடிப்படை என்று கொள்கின்றது.

யாது?

வினா (28) : அரசியல் துறை என்பதற்கு நீங்கள் தரும் விளக்கம்

விடை : சமூகத்தில் குழப்பங்களுக்கு இடமில்லாமலும் மனிதன் மன நிறைவுடனும் இன்பத்துடனும் வாழும்படியும் நல்லொழுக்க உறவை நிலைநாட்டுவதனையே அரசியல் என்கிறோம். இந்நிலையை உறுதியாய் நிறுவுவதற்காகவே