பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

|---

அப்பாத்துரையம் - 46

அரசாங்கம் என்ற ஓரமைப்பை உண்டுபண்ணி சட்டங்கள் எனப்படும் கட்டுப்பாடுகளை மக்கள் செயல் வாழ்க்கை மீது சுமத்தும் உரிமையையும் அதனிடம் தந்துள்ளோம். இச்சட்டங்கள் தனி மனிதருக்கும் உண்டு. குழுக்கள், வகுப்புகளுக்கும் உண்டு. சுருக்கமாகக் கூறினால், ஒரு குறிப்பிட்ட வரம்புவரை தனி மனிதன் தன் விருப்பம் போல் நடக்கலாம். அதற்கு மேற்பட அவன் நடத்தலாகாது; ஏனெனில் அது பிறருக்கு இன்னலுண்டாக்கும்.

வினா (29) : பொருளியலே அரசியலின் அடிப்படை என்று கூறினீர்களே : அது எப்படி?

விடை : அரசியலின் முதன்மையான அடிப்படை பொருளியல் என்பது இன்னும் பொருத்தமாயிருக்கும். சில சட்டங்கள் முற்றிலும் சமூகத் தொடர்பு மட்டும் உடையதென்று தோற்றக்கூடும். ஆனால் இறுதி யாராய்ச்சியில் அவையும் பொருளியல் தொடர்புடையவை யாகவே காணப்படும். எடுத்துக்காட்டாக, பல முதலாளித்துவ நாடுகளில் கொலைக் குற்றத்துக்குத் தூக்குத் தண்டனை என்று சட்டம் விதிக்கப் பட்டுள்ளது. இது பார்வைக்கு ஒரு தண்டனை ; ஒழுக்க முறையில் நேர்மையான ஒரு தீமையெதிர்ப்பு முறை என்றே தோற்றக் கூடும். ஆனால் உண்மை இது அன்று. ஒவ்வொரு குடியுரிமையாளனும் அரசியலின் தலைமைப் பேருரிமைக்கு உட்ப்பட்டவன். அதாவது, அவன் நிலை ஓர் அடிமையின் நிலை போன்றது. ஏனெனில் அவன் தொழிலாற்றலைப் பயன்படுத்தும் உரிமை அரசியலுக்கு உண்டு. ஆகவே கொலை என்பதன் மூலம் அரசியலின் உரிமைக்குப் பங்கம் ஏற்படுகிறது. ஒரு அடிமையின் தொழில் உரிமை கெடுகிறது. இங்ஙனம் அரசியலாருக்குரிய தொழிலடிமை களின் தொழிலுரிமைச் செல்வம் கெடாதபடி பாதுகாக்கப்படுவ தற்கே படுகொலைக்குத் தூக்குத் தண்டனை வகுக்கப்பட்டிருக் கிறது. நில உடைமை முறையிருந்த நாட்களில் தொழில்சக்தி இவ்வளவு அருமையாயில்லை. ஆகவே கொலையும் அவ்வளவு பெருத்த குற்றமாகக் கருதப்படவில்லை. கொலையாளிகள் பலசமயம் தண்டனையில்லாமலேயே செல்வதுமுண்டு. மற்போர்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கொலைகள் வகையில் சலுகைகள் கூடக் காட்டப்பட்டதுண்டு.