பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

39

முதலாளித்துவ சமூகத்திலோவெனில் தொழில்சக்தி மூலம் மனிதன் உயிருக்கு ஒரு பொருள் மதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. அதைப்பாதுகாப்பதற் கான தலைசிறந்த வழி அதற்கு மிகச் சிறந்த விலை-கொலைத்தண்டனை - கொடுத்து அதனை வாங்குவதே. தற்காலத்தில் முன்னேற்றமடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் கொலைத் தண்டனையை மாற்றி வாழ்நாள் சிறைத் தண்டனையாக்க வேண்டுமென்ற கூக்குரல் எழுந்துள்ளது. இது ஏன் தெரியுமா? வாழ்நாள் தண்டனையால் அரசியலார் சம்பளம் கொடுக்காமலே குற்றத்தண்டனை பெற்றவன் உழைப்பை அவன் மறைவுவரைப் பயன்படுத்தலாம் அன்றோ?

நாம் முக்கியமாகக் குறிப்பிட்ட உண்மை, அரசியலும் பொருளிய லும் இணைபிரிக்க முடியாதபடி ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்டுள்ளது என்பதே. மேற்குறிப்பிட்டது இதன் சற்று மறைபட்ட ஓரினமேயாகும். இப்போது பிரிட்டனிலிருந்து நேரடியான எடுத்துக் காட்டு ஒன்று தருவோம். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டனில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய அரசியல் கிளர்ச்சி பாதுகாப்பு வாணிகம் வேண்டுமா, தங்குதடையற்ற வாணிகம் வேண்டுமா என்பதே. தொழில் உலகில் பிரிட்டனின் தொழிலே முதன்முதலில் வளர்ச்சி யுற்றதாதலால் சிறு கைத்தொழிலாளரையும், கலை த் தொழிலாளரையும் நம்பியிருந்த பிற நாடுகளைவிட மலிவான விலையிலும் மிகுதியான அளவிலும் பிரிட்ட னால் சரக்குகளை உண்டுபண்ண முடிந்தது. நாளடைவில் பிறர் இயந்திர உற்பத்தித் தொழிலில் இறங்கிய பின்னும் பிரிட்டனின் போட்டி அவர்கள் சக்திக்கு மேற்பட்டதாகவேயிருந்தது. இக்குறையைச் சரி செய்ய அவர்கள் பாதுகாப்பு வரிமுறையும் பிற தற்பாதுகாப்புக்கான முறைகளையும் பின்பற்றினர். எடுத்துக்காட்டாக, இதன்படி ஃபிரஞ்சு எல்லைக்குள் இறக்குமதியாகும் ஒவ்வொரு பிரிட்டிஷ் சரக்குக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் ஃபிரெஞ்சு அரசியலாருக்குச் செல்லும். இதன் மூலம் பிரிட்டிஷ் சரக்கின் விலை சரி செய்யப்படவே, அது ஃபிரஞ்சுச் சரக்குகளுடன் போட்டியிட்டு வெல்ல முடியாது போயிற்று. இதன் பயனாகவே சில பிரிட்டிஷ் அரசியல் துறையினர் உலகெங்கும் பாதுகாப்பு வரிகளும் இறக்குமதி வரிகளும் நீக்கப்படவேண்டும் என்று கிளர்ச்சி செய்யலாயினர்.