பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அப்பாத்துரையம் - 46

இது வரலாறு சார்ந்த செய்தியென்றும் ஒரு நாட்டின் அரசியல் துறை சார்ந்தது மட்டுமேயென்றும் கூறப்படலாம். ஆனால் உண்மை அதுவன்று. எந்த நாட்டின் இன்றைய அரசியலையும் கவனித்துப் பாருங்கள். அது கண்ணும் கருத்து மாய்க் கவனிக்கும் துறைகள் வாணிகம், ஏற்றுமதிகள், பாதுகாப்பு வரிகள், தொழில் பாதுகாப்பு, பங்கீடுகள், கட்டுப்பாடுகள் ஆகியவையே. போரைப் பற்றிப் பேசவோ எழுதவோ செய்யும்போது கூட, அதன் பொருளியல் நன்மை தீமைகளை ஒட்டியே அதுபற்றிப் பேசுவர்.

வினா (30) : இது வலிந்து கூறும் மிகைப்பட்ட உரையாகவே காண்கிறது. இதைத் தெளிவாக விளக்கிக் கூறுங்கள்.

விடை : முதலாளித்துவத்தின் தலைமையில் இயங்கும் தொழில் பெருக்கமாகிய ஒரே பிரச்சனையைச் சுற்றிச் சுற்றி உலகின் அரசியல் வளையமாடுகிறது. அதன் முழுச்சூழல் களையும் உணர அதன் வரலாற்றைச் சுருக்கமாகக் கண்டுணர வேண்டும்.

மேலே குறிப்பிட்டபடி தொழிற் புரட்சிக்கு ஆளான முதல் நாடு பிரிட்டனே. அதாவது சிறு கைத்தொழிலாளருக்குப் பதிலாக விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி சரக்குகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது பிரிட்டனே. நீராவி ஒரு சக்தி யென்பதை ஜோம்ஸ்வாட் ஒரு நாள் திடீரென்று கண்டு கொண்டான்.ஏனெனில் அது தேயிலைக் கெண்டியின் மூடியை மேலே தள்ள முடிந்ததைக் கவனித்தான். பல சோதனைக் காட்சிகள் மூலம் விலங்குகளின் சக்தியோ மனித சக்தியோ தூக்குவதை விட எளிதாக இன்னும் பளுவான பொருள்களைத் தூக்கித் தள்ள அது பயன்படும் என்று அவன் கண்டான்.

சரக்குகள் உண்டுபண்ணவும், கொண்டு செல்லவும் முதன் முதல் ஈடுபடுத்தப்பட்ட சக்தி நீராவியே. நீராவியின் ஆற்றலைக் கண்டுபிடித்தவர்களுள் வாட் முதல்வனல்லன் என்பது உண்மையே. இயேசு பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுகட்குமுன் ஒரு கிரேக்கன் அதனைக் கவனித்திருந்த துண்டு. ஆனால் அந்நாட்களில் மனிதன் தேவைகள் மிகக் குறைவு. மக்கள் தொகையும் குறைவு. போக்குவரவு வாய்ப்புகளும் மிகச் சில; மிகவும் ‘கர்நாடக’மானவை. இவற்றால் பெருவாரி உற்பத்தி