பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

41

தடைப்பட்டிருந்தது. மேலும் நீராவியால் சரக்குகளை உற்பத்தி செய்வதற்கும் அப்பொருளுக்கு மாற்றாகப் பொருள் பெறுவதற்கும் போதிய முதற்பொருள் கிடையாது. அந் நாட்களில் இயந்திரங்கள் உற்பத்தி செய்வதும் பெருஞ்செலவு பிடிக்கும் செயல் ஆகும். ஏனெனில் அதற்கான இரும்பு சிறு சிறு அளவிலேயே எடுக்கப்பட்டது. திட்ப நுட்பம் வாய்ந்த இயந்திரங்கள் செய்யத் தொழிலாளர்களும் போதவில்லை. க்காரணங்களினால் கிரேக்கக் கலைஞன் கண்ட மெய்மை பயன்படுத்தப் படாமலே இருந்தது.

இருபது நூற்றாண்டுகளுக்குப் பின் நிலைமைகள் மாறின. உலகின் மக்கள் தொகை பெருகிற்று. போக்குவரவு வாய்ப்புகள் மிகுதியாயின. அத்துடன் உலகின் உற்பத்தி வளத்தில் முதன்மை வாய்ந்து, கலைத் தொழிலாளர் மூலம் உலகின் செல்வத்தில் ஒரு பெரும்பகுதியைத் தன்னிடம் குவித்து வைத்திருந்த இந்தியாவும் ‘கண்டுபிடிக்கப்பட்டு' விட்டது. கை நெசவுத் துணிகளையும் பிற பொருள்களையும் மற்ற நாடுகளுக்குத் தருவித்து அதன் பயனாய் அவற்றுக் கீடாகப் பெற்ற தங்கம், வெள்ளி, பொற்கட்டி முதலிய பண்டமாற்றுக்குதவும் பொருள்கள் மூலம் இந்தியாவில் இச்செல்வம் குவிந்திருந்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கழகம் முதன்முதலில் இங்கே வந்தது வாணிகம் செய்வதற்காகவே. ஆனால் பிற்பட வாணிகம் செய்வதைவிடச் சூறையாடுவதும் அதன்பின் இந்நாட்டு மன்னர்களையும் இளங்கோக்களையும் வென்றாளுவதும் எளிதெனக்கண்டது. இச்சூறையாட்டுச் செல்வம் இங்கிலாந்தில் சென்று பாய்ந்து அங்கே ஒரு மாபெரிய வாணிகக்களத்தை உண்டுபண்ணிற்று. இங்ஙனமாக இந்தியாவி லிருந்து பெற்ற பருத்தியைக் கொண்டு நீராவியின் உதவியால் ஆடை உற்பத்தி செய்வதற்கான முதல்தர வாய்ப்பையும் சூழ்நிலையையும் அதே இந்தியாவின் ஆட்சியே அவர்கட்கு உண்டு பண்ணியது. அங்கே உற்பத்தி செய்த துணி அவ்விடத்துத் தேவையை நிறைவேற்றியபின் கோடிக்கணக்கான மக்கள் வளத்தையுடைய இந்தியாவுக்கே திரும்பவும் அனுப்பப்பட முடியும். மூலப்பொருள்களையும் ஏராளமாகத் தந்து அத்துடன் பெருவாரியான உற்பத்திப் பொருள்களுக்கும் விற்பனைக்களமா யமையும் ஒரு பெரிய நாடு அவர்கள் கையில் சிக்கியது. இவ்வகையிலேயே பொருளுற்பத்தியில் நீராவியை ஈடுபடுத்தித்