பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

அப்பாத்துரையம் - 46

தொழிற் புரட்சிக்கு வழி வகுப்பதில் பிரிட்டன் முதல் நாடாக முடிந்தது.

ஆனால் இயந்திரத் தொழில் வரம்பற்ற அளவில் உற்பத்தி செய்யும் தன்மையுடையது. ஆகவே பிரிட்டன் பிரிட்டிஷார் தேவைகளுக்கும், இந்திய விற்பனைக் களத்தின் தேவைக்கும் பெரிதளவு அப்பாற்பட்டு மிகுதியாக உற்பத்தி செய்ய முடிந்தது. இதுவே இன்னும் மிகுதி நாடுகளை வென்றடக்கப் பிரிட்டனுக்குத் தூண்டுதல் தந்தது. இவ்விற்பனைக் களங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வண்ணம் இன்னும் மிகுதி போர் வலிவு வாய்ந்த பிற இடங்களை வென்றுபிடிக்க வேண்டியதாயிற்று. தன் வாணிகத்தில் வேறு எந்த வெளியாரும் தலையிடாமல் பாதுகாக்க இவை தேவையாயின. பழங்காலத்தில் இந்தியாவுக்கு வரும் கடல் வழி அட்லாண்டிக் மாகடல், இந்திய மாகடல் கடந்து நன்னம்பிக்கை முனை வழி வருவதாகும். நடுநிலக் கடலும் செங்கடலும் ஒரு கால்வாய் மூலம் இணைக்கப் படுமானால் இப்பாதை அரையளவு தொலைவு உடையதாகி விடும். சூயஸ் கால்வாய் வெட்டப்பட்டதன் காரணம் இதுவே. இக் கால்வாயைப் பாதுகாப்பதற்காக ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நீண்ட கடற்கரைப் பகுதிகளை வெல்ல வேண்டி வந்தது. தொழில் முன்னேற்றமே இவ்வாறாக பிரிட்டனை நாடு வெல்லும் துறைக்கு இழுத்து வெளிநாட்டு அரசியல் சுழல்களிலும் அதை நடத்திச் செல்லலாயிற்று.

இயந்திரங்களை உற்பத்தி செய்வதிலும் மற்ற நாடுகள் பிரிட்டனுக்குப் பிற்பட்டேயிருந்தன. ஆகவே பிரிட்டனால் அந்நாடுகளுக்கும் தன் உற்பத்திப் பொருள்களை விற்க முடிந்தது. ஆயினும் இது நெடுநாள் நடக்க முடிய வில்லை. ஏனெனில் ரோப்பிய விஞ்ஞானிகளும் நீராவி சக்தியைக் கொண்டு சோதனைகள் நடத்தத் தொடங்கி விட்டனர். அவர்களும் இயந்திரங்களைக் கண்டுபிடித்தனர். இயந்திரத் தொழில் ஐரோப்பிய நாடுகளிலும் பிறப்புற்றது. சிறப்பாக ஜெர்மனி பிரிட்டனுக்கு பெரும் போட்டியாயமைந்தது. பெருவாரியாகத் தொழில் வளமடையத்தக்க வகையில் நிலக்கரி வளமும் இரும்பு வளமும் ஜெர்மனியில் இருந்தது அதற்குச் சாதகமான நிலையை உண்டுபண்ணிற்று. இதே திசை நாடி மேற்கில் அட்லாண்டிக் கடலுக்கப்பால் மேல் கரையிலுள்ள அமெரிக்காவும் முன்னேறத்