பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

43

தொடங்கிற்று. அமெரிக்காவும் கனிப்பொருள் வளமிக்க பெரிய நாடாயிருந்தது. ஆயினும் இங்கே மனித சக்தியில் குறைபாடு ஏற்பட்டிருந்தது.வெளிநாட்டினரைக் குடியேறும்படி அழைத்தது அமெரிக்கா. இவ்வாட்குறைபாட்டைச் சரி செய்து கொண்டது. இம்முயற்சி ஆள் வலுவை உயர்த்தியதுடன் மட்டுமன்றி விஞ்ஞான அறிவாற்றலையும் அத்துடன் கொண்டுவந்து சேர்த்தது. ஐரோப்பாவின் எல்லா நாடுகளிலிருந்தும், சிறப்பாக பிரிட்டனிலிருந்தும் ஜெர்மனியிலிருந்தும் விஞ்ஞான அறிஞர்கள் வந்து குடியேறினர். உலகின் ஒவ்வொரு நாட்டிலும் தொழில் வளர்ச்சியே அரசியல் வாழ்வின் உச்ச நோக்கமாக ஆன வகை இதுவே.

இந் நூற்றாண்டின் தொடக்கத்திற்குள் ஜெர்மன் தொழில் பிரமாண்டமான அளவில் வளர்ச்சியடைந்து பிரிட்டிஷ் தொழிலுடன் வெற்றிகரமாகப் போட்டிபோடும் நிலையை அடைந்தது. தொழில் நுட்பத்தைப் பற்றிய மட்டில், ஜெர்மனி பிரிட்டனைவிட முன்னேற்ற மடைந்து வந்தது. அதாவது அந் நாடு குறைந்த தொழிலாளர் செலவில் கூடுதல் சரக்கு உற்பத்தி செய்யமுடிந்தது. ஆயினும் தொழிலுக்கு இன்றியமையாத இரண்டு கூறுகள் அங்கே குறைபட்டன; அவை மூலப் பொருள்களும் ‘பாதுகாப்பான விற்பனைக் களங்களும்' ஆகும். பிரிட்டனுக்கு இத்தகைய விற்பனைக் களங்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இருந்தன வென்பதையும் அவையே 'குடியேற்ற நாடுகள்' எனப்பட்டன என்பதையும் மேலே காட்டியுள்ளோம்.

இதற்கிடையில் பிரிட்டனுடன் கூடவே ஃபிரான்சு,ரஷ்யா, ஹாலந்து, இத்தாலி ஆகிய நாடுகளும் குடியேற்ற நாடுகள் பெறத் தொடங்கின. ஆயினும் வை பிரிட்டனின் குடியேற்ற நாடுகளவ்வளவு வளப்பமுடையவையாயில்லை. எப்படியும் குடியேற்ற நாட்டுலகம் மேற்கூறிய இவ்வல்லரசுகள் ஒன்று அல்லது மற்றொன்றின் ஆட்சியிலேயே வந்தமைந்தது. ஜெர்மன் தொழிலைத் திக்குமுக்காடச் செய்யும் நோக்கத்துடன் இவ் வல்லரசுகள் தம் குடியேற்ற நாடுகள் அனுப்பும் மூலப்பொருள் களின் விலையை உயர்த்தியும் அங்கே வரும் ஜெர்மன் உற்பத்திப் பொருள்கள்மீது பாதுகாப்பு வரி விதித்தும் வந்தன. இவ்வாறு