பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

அப்பாத்துரையம் - 46

ஜெர்மனியின் தொழில் நுட்பத்துறை முன்னேற்றம் குடியேற்ற நாடுகள் இல்லாத காரணத்தினால் பயனற்றதாக்கப்பட்டது. ஜெர்மனி தன் நிலைமையைச் சரிசெய்துகொள்ள அதற்கு ஒரே ஒரு வழிதானிருந்தது. அவ்வழி போட்டி வல்லரசுகள் மீது போர் தொடுப்பதே. முதல் உலகப்போர் ஏற்பட்டதன் காரணம் இது. பொருளியல் பிரச்சினையே உலகின் அரசியல் வாழ்வுக்கு அடிப்படை என்பதற்கு இதுவே போதிய விளக்கம் ஆகும்.

இதனை இன்னும் சற்று விரிவாக விளக்குவோம். முதல் உலகப்போர் தொடங்கிய சமயம் அமெரிக்காவும் தொழில் நுட்பத் துறையில் முன்னேறி ஜெர்மனியின் நிலையைக்கூட எட்டி விட்டதானாலும், வல்லரசு என்ற முறையில் அது ஜெர்மனிக்கோ பிரிட்டனுக்கோ ஒப்பாயிருக்கவில்லை. இன்னும் அதன் முக்கிய குறைபாடு மனித சக்தி போதாமையாகவே இருந்தது. முதல் உலகப்போருக்குப்பின்கூட அமெரிக்கா தொடர்ந்து வெளி நாட்டார் குடியேறுவதை வரவேற்றது இதனாலேயே, தன்னிடம் இயல்பாகவே இருக்கும் மனித சக்தியையும் வீணாக்கவேண்டாம் என்பதனாலேயே அது முதல் உலகப் போரில் கலந்துகொள்ள மறுத்தது. போரில் கலந்த போதும் அது வெற்றிபெற்ற பக்கமே சேர்ந்தது. அதாவது பிரிட்டனுடனும் பிரிட்டனின் நேசநாடு களுடனும் அது கைகொடுத்தது. இதுமட்டுமின்றிப் போர் நடக்கும்போதுகூட அது இருதரப்பினருக்கும் சரக்குகள் விற்றுப் பிரமாண்ட அளவில் ஊதியம் பெற்றது. இவ்வகையில் முதல் உலகப்போரிலிருந்து அமெரிக்கா முன்னிலும் செல்வமும் வலிவும் மிக்க வல்லரசாக வளர்ந்தது.

முதல் உலகப்போரில் ஜெர்மனி அடைந்த தோல்வி அதன் தொழிலை நலிவுறுத்திய தாயினும் பிரிட்டிஷ் தொழிலுக்கும் ஜர்மன் தொழிலுக்கும் உள்ள போட்டி தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஃபிரான்சு, இத்தாலி, ரஷ்யா முதலிய பிற ஐரோப்பிய வல்லரசுகளும் தம்மைத் தொழில் அரசாக்கிக் கொண்டன. தொழில் நுட்பத் துறையில் முன்னேற்ற மடைந்த துடன் செல்வ நிலையிலும் ஆள் பலத்திலும் வளம்பெற்ற அமெரிக்கா இப்போட்டியில் கலந்து கொண்டது. அதற்கிடையில் இன்னொரு புதிய போட்டியரசு, சிறப்பாக மலிந்த சரக்குகளில் போட்டி போடும் அரசு, ஜப்பான் மூலம் ஏற்பட்டது.இவ்வாறு