பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

45

வரலாற்றிலேயே முதன் முதல் தடவையாக உலகில் முதல் தொழில் வல்லரசு என்ற பிரிட்டனின் நிலைமைக்கு எதிர்ப்புகள் ஏற்பட்டன. அதன் நிலைமை வரவர நெருக்கடியாய்க் கொண்டிருந்தது. ஆகவே, அது தன் பழைய எதிரியான ஜெர்மனியுடன் நேச உறவு கொண்டாடத் தொடங்கிற்று.

நீராவி சக்தியைக் கண்டுபிடித்த நாட்களுக்குப் பிற்பாடு வேறு இரண்டு தொழில்துறைச் சக்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவையே எண்ணெயும், மின்சாரமும். இவை (நீராவிக்கு வேண்டிய) நிலக்கரியைவிட எளிதாகப் பயன்படுத்தக்கூடியவை யாயிருந்தன. ஜெர்மனிக்கு இவ் விரண்டுமே இல்லை. இத் தடங்கலைச் சரிசெய்ய அது நிலக்கரியிலிருந்து எண்ணெய் எடுக்க முயன்றது. இம் முயற்சி மிகுந்த செலவு பிடித்ததுடன் போதிய பயனும் தரவில்லை. எண்ணெய் பெறவேண்டுமானால் பிற நாடுகளை வென்றாக வேண்டும். இது காரணமாகவே இரண்டாம் உலகப் போர் எழுந்தது.

இச் சுருக்க வரலாறுகளிலிருந்து ஒரு நாட்டின் அரசியல் வாழ்வில் பொருளியல் எவ்வளவு தலைமையாட்சியுடையது என்பதையும் முதலாளித்துவ நாடுகளிடையேயுள்ள போட்டி எங்ஙனம் போர்களுக்கு வழிவகுக்கின்றது என்பதையும் தெளிவாகக் காணலாம்.

வினா (31) : வாணிகம், நிதிநிலை, தொழில் ஆகியவையே போர்களின் அடிப்படைக் காரணம் என்று கூறுகிறீர்கள். ஆனால் ஒரு நாட்டின் தன்மதிப்பைக் காக்க, விடுதலையைப் பாதுகாக்க, போர்கள் நடைபெறுவதில்லையா? போர்களுக்கான குறிக்கோள்களிடையே தேசியம், தேசிய விடுதலை போன்ற உயர் ற உயர் நோக்கங்களுக்கு

டமில்லையா?

விடை : தற்காலப் போர்களைப் பற்றிய வரையில் அவற்றுக்கு 'இவற்றினும் உயரிய' நோக்கங்கள் கிடையாது. போரிலீடுபட்ட நாட்டினர் "தேசாபிமானம்" "ஜனநாயகம்” "மனித நாகரிகம்" முதலிய விழுமிய தொடர்களை மக்கள் உள்ளக்கிளர்ச்சியைக் கெடாது பார்த்துக் கொள்ளும் வகையில் ஏராளமாக வழங்குவது என்னவோ உண்மைதான். ஆனால், அவை வேறு எந்த முறையிலும் பொருளற்ற வெறுங்கூச்சல்களே. சென்ற (இரண்டாம்) உலகப் போரில் இரு தரப்பினருமே - அச்சுக்