பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

அப்பாத்துரையம் - 46

கட்சியினரும் நேசக் கட்சியினரும் - தாங்கள் நாட்டுப் பற்றுக் காரண மாகவும் உலகின் விடுதலை, மனித சமத்துவம், விடுதலை ஆகிய நோக்கங்களுக்காகவுமே போராடுவதாகப் பிரசாரம் செய்தனர் என்பது நினைவிலிருக்கலாம். அதுபோல் இருசாராருமே 'கடவுள்' ஆதரவைப் பெற்றிருப்ப தாகக் கூறினர். இருதரப்பிலும் உள்ள சமய நிலையங்கள் தத்தம் நாட்டுத் தரப்பிலேயே நின்றதுடன் முழுமனதாகப் போர் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தன.

இப்போது போர் முடிவடைந்துவிட்டது ; இவ் ஆரவார நோக்கங்களின் கூச்சல்களும் அடங்கிவிட்டன. பல நாட்டவரும் இப்போது தொடர்ச்சியாக ஆர்வத்துடன் பேசுவதெல்லாம் உலக வாணிகம், ஏற்றுமதிகள், குடியேற்ற நாடுகள், செல்வாக்கு மண்டலங்கள் ஆகியவை தான். இவையனைத்தும் பொருளியல் சார்ந்த தொடர்களே. ஆனால் மனிதனிடத்திலேயே இவை தவிர வேறு உயர்ந்த நோக்கங்கள் இல்லை யென்பதன்று இதன் பொருள்; முதலாளித்துவம் அக்கறை காட்டுவது முற்றிலும் தமக்கு ஆதாயம் தரும் அம்முறையின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் தான், வேறு எதிலும் இல்லை என்பதே.

இதற்கு நேர்மாறாக, சமதர்மம் உண்மையாகவே உயர்நோக்கங்களில் அக்கறை கொண்டுள்ளது. இந்நோக்கங்கள் “சமத்துவம்”, “சுதந்திரம்”, “தேசாபிமானம்” முதலியவைபோன்ற தெளிவற்ற பண்புகள் அல்ல. ஒவ்வோருயர் குறிக்கோளின் மதிப்பும் சமூக நலனைத் தழுவியுள்ளதாகும். எல்லா மக்களும் தனிப்பட்ட விடுதலை துய்க்கும் உரிமையுடைய வர்களே; ஆனால் அவ்விடுதலை மனித வகுப்பின் நலத்துடன் மோதாததாயிருக்க வேண்டும். இதுவே சமதர்மத்தின் உயர் குறிக்கோள். இதுவே சர்வதேச மனப்பான்மை என்பதாகும். மேலும் பல முதலாளித்துவக் குழுக்களிடையே யுள்ள போட்டியினாலேயே போர்கள் நிகழ்கின்றன என்றும் சமதர்மம் கருதுகிறது. முதலாளித்துவத்தை ஒழிப்பதன் மூலம் முதலாளித் துவங்களுக்கிடையேயுள்ள இப்பூசல்களும் அகன்றுவிடும். சமதர்ம சமூகம் இயற்கையின் வளப்பங்களையே முழுவதும் ஈடுபடுத்தி எல்லாருக்கும் போதிய நிறைவளிக்க முனையும். இவ்வகையில் தான் மனித இனம் மனநிறைவுடனும் அமைதி