பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

47

யுடனும் வாழ முடியும். நமக்கு வேண்டிய தெல்லாம் பெறப் போதிய இயற்கைச் செல்வம் உலகத்தில் தாராளம் உண்டு. தேவைக்கு முட்டுப்பாடு இல்லாதபோது தனி மனிதனுக்காயி னும் சரி, தேசங்களுக்காயினும் சரி, சச்சரவிடுவதற்கான காரணம் இருக்கமாட்டாது.

வினா (32) : அதென்ன, நாம் ஒரு தேசத்துக்கு உரியவர்க எல்லவா? உலகின் மற்றப் பகுதியிலுள்ளவர்களைப் பார்க்கிலும் நம் நாட்டிலுள்ள மக்களிடம் நமக்கு மிகுந்த ஒத்துணர்வு இருப்பது இயல்பல்லவா?

விடை : மனித வகுப்பின் வரலாறு எவ்வளவோ பழமை வாய்ந்தது; எத்தனையோ அகண்டமானது. மனிதன் எத்தனையோ தடவை இடம்விட்டு இடம்மாறி எவ்வளவோ இனங்களுடன் கலந்து ஒன்றுபட்டுள்ளான். இந்நிலையில் எந்த ஒரு வகுப்பும் தான் உலகில் இன்ன பகுதிக்கு உரிய தென்று கூறமுடியாது.

மனித வகுப்பில் மேற்போக்காக நான்கு பேரினத்தார்கள் உள்ளனர். அவர்கள் ஆரியர் (வெள்ளை அல்லது தவிட்டு நிறத்தவர்), மங்கோலியர் (மஞ்சள் நிறமும் தட்டையான மூக்கும் உடையவர்), நீக்கிரோவர் (கருமை நிறமும் அகன்ற மூக்கும் உடையவர்), செவ்விந்தியர் (செந்நிறமும் கூர்மை வாய்ந்த உறுப்பமைதியும் உடையவர்) ஆகியவர்கள். ஆனால் இப்பாகு பாடு உடலமைப்பின் சிறப்பு வேறுபாடுகளடிப்படையானதே. நம் மூக்கு வடிவம் வேறுபடினும் மேனிநிறமும் வேறுபடினும் நம் கை கால் முதலிய உறுப்புகள் ஒரே தொகையினவே; எலும்புகள் மூளை யாவும் ஒரே படியானவையே. தோல் நிறம், சில உறுப்புக் களின் அமைப்பு ஆகியவற்றின் வேறுபாடுகள் வேறுவேறு தட்ப வெப்பநிலைகளில் வாழ்வதனாலும் வேறுவேறு வகை வாழ்க்கை முறைகளாலும் இருக்கவும் கூடும்.

எப்படியும் இது மக்கள் இனமரபாராய்ச்சிக்குரிய ஒரு செய்தி மட்டுமே ஆகும். ஆனால் இப்போது நாம் கவனிக்க வேண்டியது நம் சமூக வாழ்வை நாம் அறிந்தவரை மனிதன் ஒரே டத்தில் கட்டுண்டிருப்ப வனாகக் காணவில்லை. அவன் இடத்துக்கிடம் திரிந்தவனாகவே, அதுவும் சிறப்பாக உணவு வாய்ப்புத் தேடித் திரிந்தவனாகவே தோன்றுகிறான். எடுத்துக்