பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

அப்பாத்துரையம் - 46

காட்டாக அறிவுக்கெட்டிய வரலாற்றிலேயே ஆரியர் தொடக்கத் தில் சைபீரியாவுக்குரியவராயிருந்தனர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து புடைபெயர்ந்தனர். சிலர் இன்று நாம் இந்தியா என்று குறிக்கும் நிலப்பரப்பில் குடியேறினர்; மற்றும் சிலர் அரேபியாவிலும்'இன்னும் சிலர் ஐரோப்பாவிலும் குடியேறினர். இப்புதிய தங்கிடங்களிலும் அவர்கள் நிலையாயிருக்கவில்லை. இந்தியர்கள் அரேபியாவுக்கும், ஐரோப்பா

வுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் சென்றனர். ஆப்பிரிக்கர், இந்தியாவுக்கு வந்தார்கள்; சிறு அளவிலன்றிப் பேரளவிலேயே ஐரோப்பியர் ஆசியாவிற்கு வந்தனர். பெருந்தொகையினரான இந்திய சமூகத்தினர் வெளிநாடுகளில் குடியிருப்புக்கள் அமைத் துள்ளனர். ஐரோப்பியர் ஆஸ்ட்ரேலியாவிலும் ஆப்பிரிக்கா விலும் குடியேறியுள்ளனர். ஆகவே எந்த மனிதனும் உலகப் பரப்பில் இன்ன பகுதி தனக்கு உரியது, வேறு யாருக்கும் உரியதன்று என்று கூறிவிட முடியாது. மனிதன் மொத்தத்தில் உரிமை கூறிகொள்ளக் கூடியதெல்லாம் உலகம் தங்களுடையது என்பதே.

ஆனால் மனிதர் தனித்தனி குழுக்களாகத்தான் வசித்து வந்தனர் என்பது உண்மையே. ஆனால், இது அவர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்பதனாலன்று. வயிற்றுப் பிழைப்பை நாடி அவர்கள் பல்வேறு இடங்களுக்குப் பிரிந்து செல்ல வேண்டியிருந்தது என்பதே. அவ்வவ் விடத்து நில இயல் சூழ்நிலை அவரவர் வாழ்க்கை நிலையைப் பாதித்து அதற்கு ஒன்றுபட்ட ஒரு பொது உருவம் கொடுத்தது. ஒருவருக்கொருவர் கலந்து பேசுவதற்காக அவர்கள் ஒரு பொதுப் பேச்சு முறையையும் வகுத்துக் கொண்டனர்.இதனையடுத்து இனம் பற்றிய எண்ணம் எழுந்தது. பிள்ளைகள் உண்டாக ஆடவரும் பெண்டிரும் உடல் தொடர்புகொள்ள வேண்டியிருந்தது. முற்காலங் களில் ஆடவன் தான் கண்ட எந்தப் பெண்ணுடனும் பிணைப்புக் கொண்டான். ஆனால் வாழ்க்கைக் குழு பெரிதாகவும் நிலையான குடி யிருப்புடையதாகவும் ஆனபிறகு ஆடவர் பெண்டிர் உறவு ஓர் ஒழுங்குபட்ட நிலையடைந்தது. மனிதன் தன் வாழ்க்கைத் தோழனாகப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினான். அப்போது அவர்கட்குப் பிறந்த குழந்தை தாய் தந்தையர்களுக்கு மட்டுமன்றி அவர்கள் குழுவுக்கும் உரியதாயிருந்தது. தனி