பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

49

மனிதனுக்கும் குழுவுக்கும் அல்லது வகுப்புக்கும் உள்ள தொடர்பு இங்ஙனம் வலியுற்றுப் பின்னப்பட்டது. சுருக்கமாகக் கூறினால் மனிதன் தன் சொந்தத் தேவைகளை மட்டும் நிறைவுபடுத்திக் கொள்ளும் தனி மனிதன் நிலையை விட்டு நீங்கி, வரவர மிகுதியாகச் சமூகத்தில் ஓர் உறுப்பு ஆயினான். இதற்கு ஈடாகச் சமூகம் சுமத்திய கட்டுப்பாடுகளையும் அவன் ஏற்க வேண்டியவனா னான். இங்ஙனம் மனிதன் வாழ்க்கைப் போக்கில் ஒரு புதிய மாறுதல் ஏற்பட்டது - அவன் ஒரு சமூகச் சார்புடைய உயிரினமானான்.

உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் இத்தகைய சமூகக் குழுக்கள் ஏற்பட்டன. அவற்றிடையே எத்தகைய பெருவாரியான தொடர் பிணைப்பும் இல்லாதிருந்தது. ஒரு வளர்ச்சிப்படியில் தொடர்பிணைப்பு வெறுக்கப்படவும் செய்தது; இதனை அறிவதும் எளிது. ஒருவன் தன் சமூகத்தினரிடையே நடமாடும் வரை அவனுக்குத் தீமை எதுவும் ஏற்படாதிருந்தது. ஆனால், அவன் வேறொரு குழுவின் இட எல்லைக்குட் சென்றுவிட்டால் அவன் பகைவனென்ற ஐயுறவுக்காளானான். இதில் மொழி சார்ந்த தடங்கல் வேறு இருந்தது.

காலம் செல்லச் செல்ல, குழுக்கள் அளவில் பெருகின. அவை ஒன்றையொன்று அணுகிக் கூடவும் தொடங்கின. இப்போதும் இது குறைந்த அளவில்தான் இருந்தது. தட்பவெப்ப நிலைகள், கடல், மலை, தொலைவு முதலிய நில இயல் சார்பான எல்லைக்கோடுகள் ஆகியவை இன்னும் மனிதரைப் பிரித்தே வைத்தன.

கிடைக்கும் உணவுக்குத் தக்கவகையில் குழுக்கள் அளவில் பெருக்கமுற்றன. நிலம் செழிப்புடையதாயிருந்தால், குழுக்கள் இன்னும் மிகுதி விரிவுபெற்றன. இந்தியாவும், சீனாவும் அளவில் பெரியதாகவும் செழிப்பான நிலமுடையவையாகவும் இருந்த தனால், ஐரோப்பாவை விடப் பன்மடங்கு பெருக்கமும் விரிவும் அடைந்து முன்னேற்ற மடைந்தன.

வரலாற்றில் இச் சமய முதல்தான் மனிதனிடம் தேசம் என்ற கருத்து வளரலாயிற்று. தேசம் என்பது ஒரு நிலஇயல் பரப்பு. அதில் ஒருவருக்கொருவர் சிறிது சிறிது வேற்றுமைப்படும் பல்வேறு குழுவினர் வாழ்ந்து வந்தனர். ஆனால் அவர்கள்