பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

அப்பாத்துரையம் - 46

யாவரும் தமக்குள் நேசமுடனும் அமைதியுடனும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பிணைப் புடையவராயிருந்த தோடன்றிக் குலபதிகள் என்னும் (அனுபவ அறிவுமிக்க) முதுமைவாய்ந்த அறிஞர் சிலரால் வலியுறுத்தப் பட்ட ஒரு சில கட்டுப்பாடுகளையும், சட்டதிட்டங்களையும் பின்பற்றினர். பிற்காலத்தில் குலபதியினிடமாக இந்தியாவில் அரசன் (ராஜா) என்றும் ஐரோப்பாவில் கோமகன் (Duke), கோமான் (Count) என்றும் பெயருடைய தலைவன் ஏற்பட்டான்.

அரசன் தன் ஆதிக்கத்தை உடல் வலிவினால் நிறுவினான். இது முற்றிலும் தனிப்பட்ட தன் உடல் வலிமையல்ல; அவனால் பயிற்று விக்கப்பட்ட ஒரு மக்கட்படையின் (ஆடைவையை) கூட்டுவலிமையே. அவன் ஆதிக்கம் எப்போதும் மக்கள்மேல் சுமத்தப்பட்டதாயிருக்க வில்லை; பாதுகாப்பு முறையில் குழுவினால் தம்மிச்சையாக அது அடிக்கடி மேற்கொள்ளப் பட்டதும் உண்டு. இக்காலத்தில் குழுக்களுக்கிடையே (குலங்களுக்கிடையே) போர்கள் எழத்தொடங்கியதனாலும் ஏழ்மை யுடைய குழுக்கள், சிறப்பாகக் குன்று மேடுகளிலுள் ளவர்கள் சமவெளியில் குடியேறியுள்ள செல்வமிக்க குழுக்களிட மிருந்து பொருள் திருடவும் கொள்ளையிடவும் தொடங்கிய தனால் இது அவசியமாயிற்று. அரசர்கள், கோமக்கள், கோமான்கள் இத்தகைய கொள்ளைகளிலிருந்து குழுக்களை (குலங்களை)க் காத்தனர். இவற்றிற்கு மாறாகக் குலம் அவர்கட்கும் அவர்கள் ஆட்களுக்கும் வாழ்க்கைச் சாதனம் உண்டுபண்ணித் தந்தது. பல ங்களில் கோமகனே குலபதியாயும் இருந்தான். இங்ஙனம் மனிதனின் சமூக அமைப்பிற்கான கடைகால் டப்பட்டது.

ஒரே தேசத்தில் இத்தகைய பல கோமக்கள் இருந்து அவர்கள் கடமைகள் ஒன்றுடனொன்று மோதின என்பது கண்டுணரப்பட்டது. இது ஒரு பெருந்தொல்லையாயமைந்த துண்டு! ஏனெனில் அவர்கள் உள்நாட்டுப் போர்கள் அடிக்கடி பண்டமாற்றுக்குத் தடங்கலாயிருந்தன. ஒரு குழு அயலிலுள்ள மற்றொரு குழுவுடன் பண்டமாற்று செய்வதற்காகத் தன் சரக்குகளைக் கொண்டு செல்லும்போது, பிந்திய குழுவின் கோமகன் தலையிட்டு பண்டங்களில் ஒரு பங்கைத் தனக்கெனக்