பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

51

கோரினான். கோமக்கள் நிலங்களின் உரிமைகளைக் காலால் உதைத்துத் தள்ளித் தங்கள் சொந்தப் பொறுப்பில் பணம் பறிக்கும் காலமும் ஏற்பட்டதுண்டு. ஆகவே குலங்களும், சில சமயம் கோமக்கள் பலரும், சேர்ந்து ஒரு தலைமைக் கோமகன் அல்லது அரசனைத் தேர்ந்தெடுப்பதென்று ஒருங்கினர். அரசன் வேலை கோமக்களைத் தடுத்தாளுவதும் பண்டமாற்று தொந்தரவின்றி நடக்கும்படி பார்த்துக்கொள்ளுவதும் ஆகும். முடியரசாட்சி ஏற்பட்டவகை இது. ஆகவே தேசம் என்ற கருத்து பின்னும் மாறுபட்டது. சமூகக் கடமைகளுடன் அரசியல் கடமைகளும் ஏற்பட்டன.

கோமக்களுள் வலிமை மிக்கவனான அரசனே நாட்டின் ஈடும் எடுப்பும் அற்ற தலைவனானான். அவனுக்குக் கீழிருந்து கோமக்கள் முன்போல் தங்கள் காரியங்களை நடத்தி வந்தனர். அவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைத் திறையாக அரசனுக்குத் செலுத்தினர். இந்தியாவில் அரசன் (ராஜா) தலைவனாகவும் (சர்தார்), பேரரசன் (மகாராஜா) மன்னனாகவும் (King) மாறினர். தேசமும் இப்போது அரசு (ராஜ்யம்) எனப்பட்டது. நில இன முறையில் அது மன்னரின் கோமக்கள் ஆட்சி செலுத்தும் பகுதியைக் குறித்தது. நாளடைவில் அரசன் மக்களின் பாதுகாவலனாகவும் ஒழுங்கு வழங்குபவனாகவும் ஆயினான். மக்கள் அவன் ‘குடிகள்’ எனப்பட்டனர். இங்ஙனம் அரசியல் முறையிலும் சமூக முறையிலும் முடியரசு ஒரு வலிவுவாய்ந்த நிறுவனமாயிற்று. இச்சமூக முறையே நில உடைமை உரிமை முறை (Feudalism) எனப்படும்.

இதற்கிடையே பொருளுற்பத்தி முறைகளில் ஏற்பட்ட சில சாதக நிலைகளின் பயனாக மன்னர் ளங்கோக்கள் நிலைக்கெதிராகச் சமூகத்தின் நிலை சில வகைகளில் வலிவு பெற்றது.தொடக்கக் காலங்களில் ஒவ்வொரு மனிதனும் தனக்கு வேண்டியவை அனைத்தையுமே அல்லது கிட்டத்தட்ட அனைத்தையுமோ உண்டு பண்ணிக் கொண்டான். தேவைகள் உணவு, உடை, உறைவிடம் முதலியவையே. மக்கள் மேன் மேலும் நெருங்கி உறவாடிய பின் ஒருவர்மீது ஒருவருக்கு உள்ள அச்சங் குறைந்து அவர்கள் தொகுதி முறையில் அல்லது கூட்டு முறையிலேயே உற்பத்தி செய்யத் தொடங்கினர். இதனால்