பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

அப்பாத்துரையம் - 46

தொழிலாண்மைப் பாகுபாடு ஏற்பட்டது. இதன்படி ஒருசில ஆட்கள் உணவு மட்டிலுமே உற்பத்தி செய்தனர் வேறு சிலர் ஆடையையும், சிலர் களிமண்ணாலான பொருள்களாகிய செங்கல்கள், பானை சட்டிகள் ஆகியவற்றையும் செய்தார்கள். இவர்களே சிறு கைத்தொழிலாளர்கள். வேறு சிலர் சமூகத்தின் காரியங்களை செவ்வனே ஒழுங்கமைத்து நடத்த மிகவும் அவசியமாகி விட்ட எண்ணும் எழுத்தும் கற்றனர். இவர்களே அறிவு வகுப்பு ஆயினர். இவர்களில் மிகப் பெரும்பாலோர் புரோகிதராயிருந்தனர்.

மனிதன் இன்னும் இயற்கையை முற்றிலும் தன்மயமாக்கி வென்றுவிடவில்லை. இயற்கை முதற்பொருள்கள் (பூதங்கள்) பற்றிய அச்சம் அவனிடம் இன்னும் இருந்தது. ஆகவே மனிதன் கற்பனை இம் முதற்பொருள்களைவிட ஆற்றல் வாய்ந்த ஒரு சக்தியைப் புனைந்து உருவாக்கிற்று. இந்தச் சக்திக்கு ‘கடவுள்’ என்று பெயர் தரப்பட்டது. இக் “கடவுளை” வழிபட்டு அவர் ஆற்றல்களைப் பயன்படுத்தியவர்கள் புரோகிதர் ஆயினர். அவர்களே சமூகத்தின் காரியங்களையும் நடத்தி வந்தனராதலால் அவர்கள் சமூகத்திற்கு ஒரு ஒழுங்குச் சட்டத் தொகுதி அமைத்து அதற்குக் "கடவுளின்" பெயருரிமையைக் கொடுத்தனர். இச்சட்டத் தொகுதியே 'மதம்' ஆகும்.

பிரிவுகளும் உட்பிரிவுகளும் இன்னும் பல எழுந்து முன் அமைப்புச் சிக்கல் வாய்ந்ததாயிற்று. ஆயினும் இவற்றால் சமூகத்தின் உற்பத்தியாற்றல் மிகவும் பெருகிற்று. மனிதனும் கலப்பை, கைராட்டை, சுத்தி, அரிவாள் முதலிய பல கருவிகளின் பயனையும் கண்டுணர்ந்தான். முதலில் கருவிகள் மரத்தாலும் சிக்கிமுக்கிக் கல்லாலும் அமைந்தன. இவை நிலப்பரப்பின் மீதே கிடைப்பவை யாதலால் எளிதில் எடுத்தாளப்பட்ட உலோகங்கள் பிற்படக் கண்டுகொள்ளப் பட்டன. இவற்றில் செய்த கருவிகள் இன்னும் நீடித்துழைத்தன. உலோகங்கள் உருகிய நிலையில் குழைவுடையதாகவும் வேண்டிய உருவங்கள் பெறத் தக்கவையாகவும் இருந்ததால் உற்பத்தித் துறையில் பெரும் புரட்சியை உண்டுபண்ணின.

தொழிற் பாகுபாடு, உலோகங்கள் கண்டுபிடிக்கப்படல் ஆகியவற்றுடன், மன்னரும் கோமக்களும் தந்த பாதுகாப்பு