பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

53

அமைதியும் சேர்ந்து இவ்வாறு சமூகத்தின் உற்பத்தியாற்றலைப் பெருக்கின. சமூகம் தன் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குமேல் தன்னிடம் பொருள் உற்பத்தியாவது கண்டு அதில் வரும் மிகுதி உற்பத்தியை அண்டைச் சமூகங்களுடன் பண்டமாற்றத் தொடங்கியது. ஆனால் பண்டமாற்றுவது யார்? சிறு கைத் தொழிலாளன், வேளாளன்,படைவீரன், புரோகிதன் யாவருக்கும் தத்தம் தொழிலைச் செய்யவே முடிந்தது. ஆகவே வாணிக வகுப்பு ஒன்று எழுந்தது. அவைகள் விடுமுதல் போக்குவரவுச் சாதனங்களே; அதாவது குதிரைகள், எருதுகள், எருமைகள், ஒட்டகைகள், கோவேறு கழுதைகள் முதலிய பொதிசுமக்கும் விலங்குகளே. இவற்றுடன் பண்டமாற்றை வசதிப்படுத்துவதற்கான ஏதேனும் ஒரு பண்டமாற்றுப் பொருளும் தேவையாயிற்று. அப்பொருள் எல்லாச் சமூகங்களுக்கும் ஏற்புடையதாகவும் எளிதில் கொண்டுசெல்லத் தக்கதாகவும் இருக்க வேண்டியிருந்தது. உலோகங்கள் இதுவரைக்கும் மிகவும் உயர்வாய்ப்புடையபொருள்களாயமைந்தன. அவை கிடைத்தற்கருமையானவை. எங்கும் தேவைப்பட்ட வையும்கூட பிற்காலங்களில் இரும்பு, செம்பு முதலிய உலோகங்கள் மிகுதியானபின், இவற்றினும் அருமையும் இவற்றினும் நீடித்த உழைப்பும் உடைய தங்கம், வெள்ளி போன்ற உயர்தர உலோகங்களை வழங்கினர்.

உலோகங்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே பளபளப் பான கற்களும் கழலைக் கற்களும் மனிதன் பார்வையைக் கவர்ந்தன. அவற்றைக் கொண்டு அவன் கல்மாலை செய்து கழுத்திலணிந்து கொண்டான். நாளாவட்டத்தில் பின்னும் கடினம் வாய்ந்த ஒளிவீசிய கற்களை அவன் கண்டான்.அவையே வைரம், மாணிக்கம், நீலம் ஆகியவை. இவையும் பண்டமாற்றுக் குரியவையாய் 'செல்வமணி' ஆயின. ஆயினும் எப்போதும் உலோகமே அளவை மதிப்புடைய பண்டமாற்றுப் பொருளா யிருந்தது. இன்றுவரை அதுவே அந்நிலையில் உள்ளது.

வணிகத் தொழில் இடர் நிறைந்ததாகும். அதோடு அது கடுமையான விடா உழைப்பு வேண்டியதாகவும் இருந்ததால், வாணிக வகுப்பு எப்போதுமே துணிச்சலும் அறிவுக்கூர்மையும் உடையதாயிருக்கவேண்டி வந்தது. அத்துடன் அது இருவகைப்