பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

அப்பாத்துரையம் - 46

பட்ட ஆதாயங்களை ஒன்றன் மேலொன்றாகப் பெற்றது. அதாவது தம் சமூகத்தின் உற்பத்திப் பொருள்களை மற்றச் சமூகங்களுக்கு விற்பதுடன் மற்றச் சமூகங்களின் உற்பத்திப் பொருள்களைத் தம் சமூகத்திற்கும் விற்றனர். நாளடைவில் வணிகர் தொழில் திறம் தம் நாடுகளின் எல்லைகடந்து சென்றது. அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்றதோடன்றிக் கடல்களையும் கடந்து சென்றனர். வரவர அவர்களே சமூகத்தில் முதல்தரச் செல்வமிக்க வகுப்பு ஆயினர்.

மன்னரும் கோமக்களும் தங்கள் நிலைமையை ஏற்கெனவே அரண் செய்து கொண்டிருந்தனர். மன்னர் மக்களிடமிருந்து தொடக்கத்தில் இறைவரி பிரிக்கக் கோமக்களைத் தனக்குப் பகர ஆட்களாக அமர்த்தியதுபோலவே கோமக்களும் தம் சார்பில் பகர ஆட்கள் அமர்த்தி வரிப் பிரிவுக்கு ஏற்பாடு செய்தனர். ஏனெனில் ஒவ்வொரு குடியானவ னிடத்திலிருந்தும் சிறுகைத் தொழிலாளரிடமிருந்தும் வரி சேகரிப்பது கடினமான, நீடித்த உழைப்பு தேவையான வேலையாயிருந்தது. ஆட்சி, படைத் துறைக் காரியங்களில் முழு நேரமும் ஈடுபட்டிருந்த அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. அவர்கள் பேரளவான நிலங்களைத் தமக்கெனப் பிரித்தெடுத்து வைத்துக் கொண்டு வரிபிரிக்கும் உரிமையைக் கைவிட்டுவிட்டனர்.ஆனால் அவர்கள் நிலத்தைப் பயிரிடுவது யார்? குடியானவரே தம் நேரத்தின் ஒரு பகுதியைக் கூலியில்லாமல் கோமக்கள் நிலத்தைப் பயிரிடுவதில் செலவிடவேண்டுமென்றும், சிறு தொழிலாளரும் அதுபோல் அவர்கள் தேவைகளை நிறைவுபடுத்தத் தங்கள் நேரத்தில் ஒரு பகுதியை ஈடுபடுத்த வேண்டுமென்றும் மன்னர் ஆணை பிறப்பித்தனர். கோமக்களின் மேற்குறிப்பிட்ட பகர ஆட்களே நிலமுதலாளிகள் என்று அழைக்கப்படலாயினர்.வேளாளர்களோ குடியானவர்கள் என்றழைக்கப் பட்டனர். நில முதலாளியின் நிலங்கள் பண்ணைகள் என்றழைக்கப் பட்டன.

நிலமுதலாளிகள் தங்கள் நிலம் கோமக்கள் விருப்பத்திற்குட் பட்டு அதற்குரிய காலவரையறைப்பட்டு இருப்பதை விரும்ப வில்லை. நிலையாக, தலைமுறை தலைமுறையாக அவ்வுரிமை தம்மிடமே இருக்கவேண்டு மென்று விரும்பினர். இதுவும் மன்னரால் அளிக்கப்பட்டது. இங்ஙனம் நிலமுதலாளிகள் என்ற