பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

55

புது வகுப்பு சமூகத்தில் ஏற்பட்டது. அது புதுவகுப்பு எனப்படுவதன் காரணம் அது தன் உரிமையைக்கொண்டே வாழ்க்கைக்கு வழிவகுத்துக் கொண்டதனால் ஆகும்.

இதற்கிடையில் வாணிக வகுப்பு கோமக்களுடனும் மன்னருடனும் மோதத் தொடங்கிற்று. முதலாவதாக அது மன்னரையும் அவர் கோமக்களையும் விடச் செல்வமிக்கதா யிருந்தது. இரண்டாவதாக அவ்வகுப்பினர் வெளிநாடு புகுந்தபோது அங்குள்ள மன்னரின் ஆட்கள் அவர்கள் செயலில் தலையிட்டு அவர்கள் பொருளில் பங்கு கோரினர். துவக்கத்தில் வணிகர் தாமாகவே அதனை வழக்கமாக விட்டுக்கொடுத்தனர். (இதுவே சுங்கமாயிற்று. சுங்கத்திற்கான ஆங்கிலச்சொல் (Custom) வந்த வகை இதுவே) இத்துடன் அடிக்கடி எவ்வாட்சிக்கும் உரியதல்லாத புறம்போக்குப் பகுதிகளில் அவர்கள் பயணம் செய்யும்போது அவர்கள் தம் பாதுகாப்புக்குத் தனிப்பட்ட முறையில் படைகள் வைத்துக் கொண்டனர். ஆயினும் மன்னர், கோமான்கள் அவர்கள் மீது கோரிய கோரிக்கைகள் பெருக்க மடைந்து கொண்டே வந்தன. அவை தொல்லை தருபவை என்றும் கொடுமை வாய்ந்தவை என்றும் வணிகர் எண்ணலாயினர்.

சில வணிகர்கள், சிறப்பாக மேலை உலக வாணிகர்கள், உலகின் உற்பத்தி நடுக்களமாகிய கீழ்நாட்டையடையக் கடல் பாதைகள் வழியாக வாணிகம் செய்யவேண்டியிருந்தது. ஐரோப்பாவின் கடல் வழி வணிகர்களுக்கு இது சில சாதக நிலைகளைத்தந்தது.மன்னர் படைகள் நிலத்திலேயே செயலாற்றின. ஆனால் கடல் அவர்கள் தலையீடில்லாமல் தப்பியிருந்தது. மேலும் வணிகர்கள் தங்கள் ஆட்களைப் படைவீரர்களாகப் பயிற்றுவித்துக் கொண்டனர். நாளாக ஆக வாணிகத்துடன் கூட அவர்களிற் பலர் பிற வணிகக் கப்பல்களைச் சூறையாடவும் கொள்ளையடிக்கவும் தலைப்பட்டனர். கப்பல்கள் கரையை அணுகியவிடத்தில் அவர்கள் கரையேறியும் போரிட்டுக் கொள்ளையிட்டனர். இறுதியில் வணிகர்களின் கடற்படைகள் மன்னர்களின் நாட்டுப்படையளவு ஆற்றல் வாய்ந்தவையாயின. இதன்பின் மன்னர் படைகள் வணிகர் படைகள் ஆகியவற்றின் மோதல் ஏற்பட்டது. அது கிட்டத்தட்டச் சமவலுவுடை யவர் போராட்டமே. இதில் மன்னர், கோமக்கள் படைகள் தோற்று