பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

---

அப்பாத்துரையம் - 46

மன்னன்

விடவே அவர்கள் தம் உரிமைகள் சிலவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்வதாக வாக்களித்தனர். முதலாவதாக தனிப்பட்டவர் உடைமைகளையும் தொழில் முயற்சிகளையும் மதிப்பதாக ஒப்புக் கொண்டான். இரண்டாவதாக வணிகர் பேராட்களை (Representatives) ஆட்சிப் பொறுப்பில் ஏற்று அவர்கள் அறிவுரைகளை மதித்து நடப்பதாக உறுதி கூறப்பட்டது. இப்பேராட்கள் மன்றமே அரசியல் மன்றம் (Parliament) ஆகும். அரசியல் முறையிலும் சமூக முறையிலும் வணிகவகுப்பின் ஆற்றல் வளர்ந்த வகை இது.

இவ்வளர்ச்சிப் படிகளெல்லாம் எல்லா நாடுகளிலும் ஒரே சமயத்தில் நடைபெறவில்லை. எடுத்துக்காட்டாக ஐரோப்பாவில் எழுந்த வணிக முதலாளி வகுப்பு கீழ்நாட்டிலோ அமெரிக்காவிலோ ஏற்பட வில்லை. ஆயினும் வரலாற்றுக்கெட்டாப் பழங்காலங் களில் வெளிநாடுகளி லும் கடல்கடந்த நாடுகளிலும் இந்திய வணிகரும் சீன வணிகரும் வாணிகம் செய்தனர் என்று மட்டும் ஐயமற அறிகிறோம். ஆயினும் எக்காரணத் தாலோ அவர்கள் ஓர் ஆற்றல்மிக்க வகுப்பு ஆகவில்லை. இந்தியாவும் சீனாவும் செயலளவில் சிறுகைத் தொழிலாளர், குடியானவர்கள், புரோகிதர், மன்னர் ஆகியவர்களின் நாடுகளாகவே அமைந்து நின்றன.

ஐரோப்பிய வணிக வகுப்பு மிக விரைவாக வலுப்பெற்று வளர்ச்சி யடைந்தது. மன்னரும் தம் நாட்கள் குறுகிவிட்டன என்று கண்டு அவர்களுடன் தம் ஆட்சியுரிமையைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டனர். இருசாராரும் சேர்ந்து மக்களை அரை அடிமைகளாக்கினர். அதாவது ஒவ்வொரு மனிதனுடைய உழைப்புச் சக்தியை வாங்கி அதற்கு மாறாக அவனுக்கு வாழ்க்கைச் செலவுத் தொகையை மட்டும் கொடுத்தனர் இத்தொகையே சம்பளம் ஆகும். ஒரு நாட்டு வர்த்தகர் மற்ற நாட்டு வர்த்தகருடன் மோதினர். இதனால் மன்னர் இணக்கம்பெற்று நாடுகளின் பேரால் போர்கள் நடைபெறலாயின.

வணிகர்கள் நகரத்தார் இங்கிலாந்தில் பர்க்கர், ஐரோப்பாவில் பூர்ஷ்வா) என்றழைக்கப்பட்டனர். இன்ப வகுப்பினர் என்ற தற்காலச் சொல் (ஐரோப்பிய மொழிகளில் பூர்ஷ்வா) முதலாளிகளுக்கு இவ்வகையிலேயே (ஐரோப்பிய