பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

57

மொழிகளில்) ஏற்பட்டது. 'வணிக வகுப்பு மிகமிகச் செல்வ முடைய தானதுடன் வரவரப் பெருக்கமும் சிக்கல் வாய்ந்த பல்வகைப் பெருக்க விரிவும் உடையதாயிற்று. எடுத்துக் காட்டாக, உலகின் முதன் முதல் வணிக முதலாளித்துவ அமைப்பாகிய பிரிட்டிஷ் கிழக்கிந்தியாக் கழகம் இங்கிலாந்து மன்னரைவிட மட்டுமின்றி உலகின் எம் மன்னர்களை விடவும் மிகப்பெரிய படைகளும் மிகப் பெருக்கமான செல்வமும் மிக விரிவான ஆட்சி அதிகாரிகளும் உடையதாயிருந்தது.நாளடைவில் கிழக்கிந்தியாக் கழகம் போர்கள் நடாத்திற்று; நாடுகளை வென்றது; தன் சார்பிலேயே ஆட்சி முறைகள் செய்தது. இவையனைத்தையும் பிரிட்டனின் மன்னன் ஒத்துக்கொள்ளவே வேண்டியதாயிற்று.

இப்பெருங்குவைச் செல்வமனைத்தையும் வைத்துக் கொண்டு வணிகர் வகுப்பு என்ன செய்யமுடியும்? செல்வத்தைக் குவித்து வைப்பது பயனற்றது. அது பயன்படுத்தப்படவேண்டும். ஆனால் எவ்வகையில்? மிகச் சிறந்த வகை, செல்வ வகுப்பினர் தாமே உற்பத்தியாளர் ஆவதுதான். சிறு கைத்தொழிலாளர் மிகக் குறுகிய அளவில்தான் உற்பத்தி செய்யமுடியும். ஆனால் அதே சமயம் மிகப் பெரிய அளவு மக்கள் தொகுதியுள்ள நாடுகள்தான் இந்நிலையில் சாதகமடைய முடியும். இவ்வணிக முதலாளிகளோ சிறிய வறுமையற்ற நாடுகளில் இருந்தனர். எனவே மிகக் குறைந்த அளவு தொழிலாளர் சக்தியுடன். கூடியமட்டும் மிகுதியாக உற்பத்தி செய்தல் எவ்வாறு?

இங்கேதான் விஞ்ஞானத்தின் உதவி பயன்பட்டது. ஏற்கெனவே மனிதன் தொழில் ஆற்றலை மிச்சப்படுத்தும்‘சூச்சப் பொறிகள்' பலவற்றைக் கண்டுபிடித்திருந்தான். ஆயினும் இப்பொறிகள் யாவும் மனித ஆற்றலாலேயே இயக்கப்பட்டி ருந்தன. இப்பொறிகளுக்கு இப்போது நீராவியாற்றல் பொருத்தப் பட்டது.இத்தகைய பொறி ஒரு இயக்கு பொறி (எஞ்சின் அல்லது இயந்திரம்) எனப்பட்டது. இவ் வியக்கு பொறி இரவுபகல் உழைக்கும் என்பது மட்டுமன்று; அது கூலியும் கேட்காது. ஆகவே நீராவி இயந்திரம் நிறைவுற உருவாக்கப்பட்டு நூற்கவும் ஆடை நெய்யவும் பயன்படுத்தப்பட்டது. இங்ஙனம் உலகின் முதல் இயந்திரம் தோற்ற மெடுத்தது. இது பத்துச் சிறுகைத் தொழிலாளர் உற்பத்தி செய்யும் அளவு உற்பத்தி செய்தது.