பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

அப்பாத்துரையம் - 46

வணிகன் இப்போது உற்பத்தியாளனானதுடன் பெருவாரி அளவான உற்பத்தியாளனுமானான். அவன் உற்பத்திச் சரக்குகளும் சிறு கைத்தொழிலாளன் சரக்குகளைவிட மலிவாயிருந்தது. கீழடக்கப்பட்டிருந்த நாடுகளிலிருந்து இவ்வணிகன் தனக்கு வேண்டிய மூலப்பொருள்களைப் பெற்றுக்

காண்டான்.

வணிக முதலாளியின் ஆற்றல் பெருகிக்கொண்டே சென்றது. அவர்களே மற்ற யாவரினும் ஆற்றல் மிக்க வகுப்பின ராயினர் என்பது மட்டுமின்றி, குடியானவரும் சிறு கைத்தொழி லாளரும் தங்கள் பிழைப்புக்கே அவர்களைச் சார்ந்து வாழவேண்டியவராயினர். மன்னரும் கோமக்களும் தங்கள் தாழ்வுற்ற நிலைமையை வாய்மூடி வாளா ஏற்றமைந்தனர். நாட்டின் ஆட்சி ஆதிக்கத்தையும் வணிக முதலாளிகளே நடத்தும்படி அவர்கள் விட்டுவிட்டனர். ஆட்சிக்குழுவும் இதுமுதல் அரசியல் அல்லது அரசாங்கம் என அழைக்கப்பட லாயிற்று. இராஜ்யம் (Kingdom) என்ற சொல்லுக்குப் பகரம் அரசு (State) என்பது வழங்கலாயிற்று. அரசியல் வகையில் முன்னம் வழங்கிய நாடு (Country) என்ற சொல்லினிடமாகத் தேசம் (Nation) என்ற சொல் வழங்கப்பட்டது. இங்ஙனம் நாடு, அரசு, தேசம் என்ற சொற்களெல்லாமே ஒரு பொருளியல் அமைப்பு முறையையும் அதன் செயல் விளைவாகிய ஆட்சியையும் குறிப்பாக உணர்த்த வந்தவையே என்பது விளங்கும் தேசப்பற்று, தேசியம் முதலிய குறிக்கோள் தன்மை வாய்ந்த மதிப்புக்கள் அவற்றுக்கு உயர்தரப் பெருமை கொடுக்கவே எழுந்தன. அவற்றின் முக்கிய நோக்கம் ஒரு நாட்டின் நில இயல் வரம்புக்குள் நிலவும் பொருளியல் அமைப்புக்குத் தொடர்ந்த நிலைபேறு உண்டுபண்ணுவதன்றி வேறெதுவும் இல்லை.

மக்கள், அதாவது உற்பத்திச் சாதனங்களை உடையவர்க எல்லாது பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் தாயகத்திலுள்ள சிறு கைத்தொழி லாளராயினும் சரி; குடியேற்ற நாடுகளிலுள்ள மூலப் பொருளுற்பத்தி யாளராயினும் சரி, அனைவருமே படிப்படியாகக் கூலிக்குழைப்பவ ராயினர். தொழில் முதலாளித்துவ வளர்ச்சி இடைவிடாது அவர்கள் நிலைமையைப் பாதித்து வந்தது. முதலாளிகள் மேன்மேலும் செல்வர்க ளாகவும்