பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

59

கூலியாளர்கள் மேன்மேலும் வறியோர்களாகவும் வளர்ந்து வந்தனர். படிப்படியாக உலகெங்கும் உள்ள கூலி நாடுவோர் நலன்கள் ஒன்றுபட்டவை என்பதும்; மனித இனத்தைச் சார்ந்தவர்கள் அனை வருமே நட்பும் அமைதிவாய்ந்த வாழ்வும் உடையவர்களாவது இயலுவதே என்பதும்; போர்கள் எழுவதற்கு இயல்பான காரணங்கள் எதுவுமே கிடையாது என்பதும் விளங்கத் தொடங்கின. இவையனைத்தையும் நனவாகக் காண ஒரே வழி முதலாளித்துவ வகுப்பை இல்லாமற் செய்வதும் மனிதனிடமிருந்து மனிதனைப் பிரித்து வைக்கும் செயற்கைத்தன்மை வாய்ந்த தேசிய எல்லைகளை அழிப்பதுமே யாகும். சமதர்ம வாழ்க்கைக் கோட்பாடு, உலக நாடுகளின் மனப்பான்மை ஆகியவற்றின் மூலவேர் இதனை உணர்வதிலேயே அடங்கியுள்ளது. அதாவது எல்லா மக்களும், அவர்கள் உலகின் எப்பகுதியிலிருப்பவர்களா யினும் சரி, ஒன்றுபட்டு முழு நிறைவான அளவில் ஒத்துழைக்க வேண்டும் என்பதே.

வினா (33) : முதலாளித்துவம் ஒழிந்தே தீரும் என்று நீங்கள் உண்மையில் நம்புகிறீர்களா? அப்படி நம்புவதேன்?

விடை : ஒரு முதலாளித்துவ நாட்டின் ஆற்றல் அதன் உற்பத்தி யாற்றலுக்கு ஏற்றபடியிருக்கும். நன்கு வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ அரசியல் மூலப்பொருள் வள மட்டுமே நிறைந்துள்ள ஓர் ஏகாதிபத்திய அரசியலை வென்றுவிட முடியும்.

து சென்ற உலகப் போரில் நடைபெற்றது. முதலாளித்துவ நாடாகிய ஜெர்மனி ஏகாதிபத்திய நாடாகிய ஃபிரான்சை வென்றதுடன் கிட்டத்தட்ட இங்கிலாத்தையும் வெல்ல விருந்தது. ஆயினும் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் ஆகிய இரண்டினை யும் தாக்கும் எதிர்ப்பு மக்களிடமிருந்தே, அதிலும், தொழில் வளர்ச்சிச் சமூகத்தில், இயந்திர உழைப்பு வகுப்பினரிடமிருந்தே வருகிறது. மற்றும் இவ்வெதிர்ப்பு வெறும் போட்டியினால் ஏற்படும் எதிர்ப்பன்று; நேர்மாறாக அது வரலாற்றுமுறைச் சூழ்நிலைகளில் ஏற்படும் எதிர்ப்பு. நேர்மையும் சமத்துவமும் உடையதாய், வறுமை, போர்கள் முதலியவற்றைத் தடமற ஒழிக்கக் கங்கணங்கட்டிய ஒரு சமூகத்தை அமைப்பதே அச் சூழ்நிலையின் நோக்கம். இக் கோட்பாட்டைப் பிரசாரம் செய்யும் கொள்கை முறைக்குச் சமதர்மம் என்று பெயர்.