பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

அப்பாத்துரையம் - 46

க்கோட்பாட்டை முதன் முதலில் கண்டு கூறியவர் கார்ல் மார்க்ஸ் என்ற ஜெர்மன் யூதர். முதலாளித்துவம் வளர்ந்து கொண்டிருந்த அந்தக் காலத்திலேயே அதற்கு ஏற்படவிருக்கும் நெருக்கடியைக் கார்ல் மார்க்ஸ் முன்கூட்டியறிந்தது வியப்புக் குரிய தாயினும் உண்மையே. இங்ஙனம் முன்கூட்டியறிந்தது எவ்வாறு எனில், முதலாளித்துவத்தின் சமூகச் சார்பான இயல்புகளையும் அதன் போக்கையும் அதனால் ஏற்படும் வறுமை, உற்பத்திக்கே ஏற்படும் முட்டுக்கட்டைநிலை ஆகிய விளைவு களையும் அவர் தீர விஞ்ஞான முறையில் ஆராய்ந்ததே யாகும். அவர் முடிவுகள் சரியான முன்னறிவிப்புக்கள் என்பதை இப்போது காலம் காட்டிவிட்டது.

வினா (34) : சமதர்மிகளிடையே பொதுவுடைமையாளர், மார்க் ஸிஸ்டுகள், சமதர்மக் கட்சியினர் ஆகிய பல பிரிவினர் இருக்கின்றனர். அவர்களிடையே உள்ள வேற்றுமைகள் யாவை?

விடை : சமதர்மிகள், பொதுவுடைமையாளர்கள், மார்க்ஸிஸ்டுகள் ஆகிய அனைவருமே சமதர்மம் என்ற ஒரே கோட்பாட்டைப் பின்பற்று பவர்களே. ஆதலால் உண்மையில் அவர்கள் ஒரே தன்மையுடையவர்களே. ஆயினும் அவர் களிடையே சில வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.இவ்வேறுபாடுகள் மரபும் நோக்கும் பற்றியவையேயன்றி, கோட்பாடும் கருத்துப்போக்கும் பற்றியவையல்ல.

சென்ற நூற்றாண்டில் மார்க்ஸுடன்கூட அவரைப் போலவே சமதர்மம் பரப்ப முன்வந்த வேறு சில மெய்விளக்க அறிஞரும் எழுந்தனர். அவர்களுட் சிலர் சமதர்மம் படிப்படியாக வளர்ச்சிபெறும் என்றும் முதலாளித்துவம் அதுபோலத் தானாகவே படிப்படியாக மறைந்துவிடும் என்றும் கூறினர். ஆனால் இம்முடிவில் மார்க்ஸ் கருத்து வேறுபட்டார்.

பெருத்த அளவான அடிப்படை மாற்றங்கள் படிப்படியாக ஏற்படுவ தில்லை, பெரும்புயலெழுப்பிக் கிளர்ச்சியுடனேயே ஏற்படும் என்பது மார்க்ஸின் கருத்து. பிறப்பு இறப்பு ஆகியவை இதற்கான அவரது விளக்க எடுத்துக்காட்டுகள். முதலாளித்துவம் மங்கி மறைவதும் சமதர்மம் தானாக அதனிடமாக அமைவதும் இயல்பென நம்புவதிற்கில்லை நேர்மாறாக முதலாளித்துவத்தின் அணி வகுப்புக்களுக்கும் மக்கள் அணிவகுப்புக்கும் இடையே