பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

61

மோதுதல் ஏற்படுவது விலக்க முடியாதது. இப்போரில் மக்கள் வெற்றிபெற்ற பின்பே சமதர்மம் எழும். மார்க்ஸின் இக் கொள்கையை மற்ற கொள்கைகளிலிருந்து பிரித்துணரவே மார்க்சிசம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்ற நூற்றாண்டின் நடுவிலிருந்து ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் சமதர்ம இயக்கங்கள் பல தோன்றியுள்ளன. அவையனைத் துமே உலக நாடுகள் பான்மையை ஒத்துக் கொண்டனவாதலால் அவை சமதர்மக் குடியாட்சிக் கட்சி (Social Democratic Party) என்ற ஒரே பெயரை வைத்துக்கொண்டன. இங்ஙனம் ஜெர்மன் சமதர்மக் குடியாட்சிக் கட்சி, ரஷ்ய சமதர்மக் குடியாட்சிக் கட்சி, ஃபிரஞ்சு சமதர்மக் குடியாட்சிக் கட்சி முதலிய கட்சிகள் எழுந்தன. அவர்கள் உலக மேடையொன்றும் அமைத்தனர். அதுவே இரண்டாம் உலக அவை (Second International) ஆகும். (முதல் உலக அவை பிறந்தவுடன் கலைந்து விட்டது. ஆனால் இது கொள்கையடிப்படையான எந்த வேறுபாட்டாலும் அல்ல; உட்பூசல்களால் மட்டுமே) இவ் விரண்டாம் உலக அவையினரும் சமதர்மக் குடியாட்சிக் கட்சியினரும் ஒருங்கே சமதர்மக் கட்சியினர் என்று அழைக்கப்

பட்டனர்.

சமதர்மக் குடியாட்சியாளரின் சோதனைக்குரிய காலம் முதல் உலகப் போரில் ஏற்பட்டது. அவர்கள் உலக நாடுகள் பான்மையில் ஊன்றியவர்களானால், அவர்கள் தெளிவான கடமை அப்போரையே எதிர்ப்பதாகும். இங்ஙனம் செய்வதற் கான தீரம் அவர்களிடம் காணப்பட வில்லை என்பது புரியக்கூடியதே. அவர்களில் சிலர் போர் முயற்சியில் தத்தம் முதலாளித்துவ அரசியல்களை ஆதரிக்கவும் முற்பட்டனர்.

இப்பிரச்சனைமீது ரஷ்யாவில் சமதர்மக் குடியாட்சிக் கட்சியிடையே இரு உட்பிரிவுகள் தோன்றின. அவற்றுள் மிதமான போக்குடையவர்கள் மென்ஷெவிக்கர்கள் என்றும், புரட்சிகரமான போக்குடையவர்கள் போல்ஷெவிக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். போல்ஷெவிக்கரின் கருத்தில் போர் முதலாளித்துவ ஏகாதிபத்தியச் சார்பானது. ஆகவே அது உழைப்பு வகுப்பின் ஆதரவு பெறுவதற்குரிய தன்று. அதுமட்டுமன்றி, போரை நிறுத்துவதற்கான வழியே முதலாளித்