பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

||--

அப்பாத்துரையம் - 46

துவத்தைக் கவிழ்ப்பதுதான் என்று போல்ஷெவிக்கர் கருதினர். முடிவாக 1917-ல் அவர்கள் ரஷ்ய முதலாளித்துவ வகுப்பை முறியடிப்பதிலும் வெற்றி பெற்றனர். இவ்வெற்றியே ரஷ்யப் புரட்சி எனப்படுகிறது.

புரட்சிக்குப்பின் சமூகக் குடியாட்சிக்கட்சிகளுக்கும் போல் ஷெவிக்கர்களுக்கும் இடையேயுள்ள பிளவு அகற்கியடைந்தது. அதன்பின் ரஷ்யாவில் புதிதாக நிறுவப் பெற்ற மூன்றாம் உலக அவை மூலம் போல் ஷெவிக்கர் தம் பொதுக் கருத்தையே காண்ட கட்சிகளை மற்ற நாடுகளிலும் வளர்க்க முடிவுச் செய்தனர். இம்மூன்றாம் உலக அமைப்புடன் இணைக்கப்பட் கட்சிகளே பொதுவுடையைக் கட்சிகள் எனப் பெயர்பெற்றன.

மூன்றாம் உலக அவையும் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் தன்னிச்சையாகவே கலைந்து திடீர் முடிவு பெற்றது. அதன்பின் உழைப்பாளிகள் உலக அவை ஏற்படுத்த வேறு முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை.

ஆகவே மேற்கூறப்பட்டதுபோல, பல்வேறு சமதர்மக் கட்சிகளிடையேயும் உள்ள வேறுபாடு வரன்முறை

பற்றியதேயன்றிக் கொள்கை யடிப்படை பற்றியதல்ல.

வினா (35): ரஷ்யப் புரட்சியின் தன்மை பற்றிப் பெருத்த கருத்து வேறுபாடு இருந்துவருகிறது. அது சமதர்மச் சார்பானதா? மனிதனின் சமூக வளர்ச்சி வரலாற்றில் அது ஒரு குறிப்பிடத்தக்க எல்லைக் கோடாகும் என்பது உண்மையா?

விடை : வரலாற்றின் ஒவ்வொரு பெரிய கட்டத்தைப் பற்றியும் கருத்து வேறுபாடு எழுவது இயற்கையே. ரஷ்யப் புரட்சியும் இப்பொது அமைதிக்கு விலக்கன்று. 'ரஷ்யப் புரட்சி உண்மையில் ஒரு புரட்சியே யன்று; ஒரே அமளிகுமளியும், திட்டமிட்ட கூட்டுக்கொள்ளையுமன்றி வேறன்று' என்று கூறப்பட்ட காலம் ஒன்று உண்டு. ஆனால் அக்காலம் மலையேறி விட்டது.இப்போது அது நகையாடிப் புறக்கணிக்கத் தக்கதன்று; வரலாற்று முக்கியத்துவமுடைய ஓர் ஊழித்திருப்பக்கல்லே என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில் உலகெங்கும் முதலாளித்துவக் கட்சியினரே இதனை ஒத்துக் கொண்டுள்ளனர். அது இன்றைய நாகரிகத்தையே